நானா...? சினிமாவில் நடிக்கிறேனா?? பதறும் சத்யராஜ் மகள்
Recommended Video

சத்யராஜ் மகள் திவ்யா அடுத்த ஹீரோயினா ?
தான் சினிமாவில் நடிக்கப் போவதாக வந்துள்ள செய்திகளுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார் சத்யராஜ் மகள் திவ்யா.
நடிகர் சத்யராஜின் ஒரே மகள் திவ்யா. ஊட்டச் சத்து நிபுணராக இரு கிளினிக்குகளில் பணியாற்றும் அவர், அந்தப் பாடத்தில் இப்போது பிஎச்டி படித்துக் கொண்டிருக்கிறார். அதாவது இனி டாக்டர் திவ்யா!

அவரும் சினிமாவில் நாயகியாக களமிறங்கப் போகிறார் என சமூக வலைத் தளங்களில் செய்திகள் வெளியாக, பதறிப் போய் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் திவ்யா.
அதில், "எனக்கு சினிமா பிடிக்கும், திரைத்துறை மீது மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் நான் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அதில் ஆர்வமும் இல்லை. இப்போது பிஎச்டி படித்துக் கொண்டிருக்கிறேன். உடல் நலம் - ஊட்டச்சத்து குறித்து ஒரு ஆவணப் படம் எடுத்துக் கொண்டுள்ளேன்," என்று தெரிவித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications