CM விஜய் ஒரு ஸ்டார் தான்.. ஆனால் அவர்தான் தலைவர... நடிகரின் மகள் பாராட்டித் தள்ளுறாங்களே

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் காட்சிகள் எல்லாம் மொத்தமாக மாறிவிட்டது. அதாவது நடிகர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று ஆட்சி நடத்தி வருகிறார். ஆட்சி அமைத்து இரண்டு வாரங்களே ஆனாலும் பாராட்டுகளும் விமர்சனங்களும் எதிர்ப்புகளும் என பலவும் ஆட்சியை நோக்கி வந்து கொண்டே உள்ளது. இந்த தேர்தலில் விஜய் ரசிகர்கள் தொடங்கி நெட்டிசன்கள் வரை பலருக்கும் கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தியது என்றால் அது நடிகர் சத்யராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரின் நடவடிக்கைகள் தான்.

ஆமாம், நடிகர் சத்யராஜும் அவரது மகள் திவ்யாவும் திமுகவுக்கும் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆதரவாக பிரசாரமே செய்தனர். இதில் சத்யராஜ் ஒரு படி மேலே சென்று தவெக தலைவர் விஜய்யை காட்டமாக விமர்சித்தார். அவரது இந்த விமர்சனத்திற்கு இணையவாசிகளும் விஜய் ரசிகர்களும் தவெகவினரும் பதில் கொடுத்து வந்தாலும், சத்யராஜின் மகனும் நடிகருமான சிபிராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் மறைமுக பதிலடிகளைக் கொடுத்து வந்தார்.

Sathyaraj s Daughter Praises Leadership Qualities Amid CM Vijay Political Buzz in Tamil Nadu

சிபிராஜ்: விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றதுமே, சிபிராஜ் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்தார். அதில் இணையவாசிகள், விஜய் ரசிகர்கள், தவெகவினர் என பலரும் சிபிராஜை பாராட்டினர். காரணம் வீட்டில் அப்பாவும் சகோதரியும் திமுகவுக்காக பிரசாரமே செய்யும் போது, இவர் மட்டும் விஜய்க்கு ஆதரவாகவும் திமுகவுக்கு எதிராகவும் கருத்துக்களை தெரிவித்து வந்தார். கடந்த வாரத்தில் முதலமைச்சர் விஜய்யை சந்திக்கவும் செய்தார். அது தொடர்பாக மிகவும் மகிழ்ச்சியாக புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டார்.

Sathyaraj s Daughter Praises Leadership Qualities Amid CM Vijay Political Buzz in Tamil Nadu

சத்யராஜ் மகள்: இந்நிலையில் நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், திமுக இளைஞரணிச் செயலாளரும் முன்னாள் துணை முதலமைச்சருமான உதயநிதியை சந்தித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு, " ஒரு நட்சத்திரம் தான் உச்சத்திற்குச் செல்ல வேண்டும் என்று விரும்புவார், ஆனால் ஒரு தலைவர் தான் தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் உயரத்துக்கு கொண்டு செல்வார்" என்று கேப்ஷன் இட்டுள்ளார். இவரது இந்த புகைப்படம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X