மகனுக்காக மீண்டும் சத்யராஜ் தயாரிக்கும் படம் 'நாய்கள் ஜாக்கிரதை'!

By Shankar

Sathyaraj's next production venture Naaigal Jaggirathai
சென்னை: மகனுக்காக மீண்டும் தயாரிப்பாளராக மாறியுள்ளார் நடிகர் சத்யராஜ். இந்தப் படத்துக்கு நாய்கள் ஜாக்கிரதை எனத் தலைப்பிட்டுள்ளார்.

மகன் சிபிராஜை ஹீரோவாக்கி இவர் முதன் முதலில் லீ என்ற படத்தைத் தயாரித்தார். நாதாம்பாள் பிலிம் பேக்டரி என்ற பெயரில் இதற்காக சொந்தப் பட நிறுவனம் தொடங்கினார்.

பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைத் தேடித் தரவில்லை. சிபிராஜும் பெரிய நடிகராக ஜொலிக்க முடியவில்லை.

இந்நிலையில், தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் மேலும் ஒரு படத்தை தயாரிக்கிறார் சத்யராஜ். அப்படத்திற்கு 'நாய்கள் ஜாக்கிரதை' என்று பெயரிட்டிருக்கின்றனர். இப்படத்திலும் சிபிராஜ்தான் நாயகன்.

இப்படத்தில் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறதாம்.

இப்படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்குகிறார். இவர், பிரசன்னா, சிபிராஜ் நடிப்பில் வெளிவந்த 'நாணயம்' படத்தை இயக்கியவர். தரண்குமார் இசையமைக்கிறார். நிஷார் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X