மீண்டும் 'மொட்டை'யோடு போலீஸ் வேடத்தில் சத்யராஜ்!

By Mayura Akilan

ஹரி இயக்கும் பூஜை படத்தில் போலீஸ் அதிகாரியாக சத்யராஜ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொட்டை தலையோடு கையில் துப்பாக்கியுடன் அவர் போஸ் கொடுத்துள்ள போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகின்றன.

சிங்கம்-2 படத்துக்கு பிறகு ஹரி இயக்கும் படம் பூஜை. விஷால் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். சூரி, ஜெயபிரகாஷ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.

பிரபல நாயகிகள்

பிரபல நாயகிகள்

இந்தப் படத்தில், ஸ்ருதி ஹாசனுடன் மாஜி ஹீரோயின்கள் ராதிகா, சித்தாரா, ஐஸ்வர்யா, ரேணுகா, அபிநயா, துளசி என பல நாயகிகள் நடிக்கிறார்கள்.

கோவையில் தொடங்கி பாட்னாவரை

கோவையில் தொடங்கி பாட்னாவரை

படத்தின் கதை கோயம்புத்தூரை சுற்றி நடக்கிறது. இறுதியில் பாட்னாவில் முடிவடைகிறதாம். அரிவாள் வைத்து படம் எடுக்கும் ஹரி, இந்தப் படத்திற்கு பூஜை என்று வைத்தது ஏன் என்று அவரே காரணம் கூறியுள்ளார்.

அரிவாளுக்கு பூஜை

அரிவாளுக்கு பூஜை

ஆண்டவனுக்கு மட்டுமல்ல அரிவாளுக்கும் பூஜை போடலாம்"ங்றதுதான் படத்தோட ஒன்லைன். தாமிரபரணி படத்துக்கு பிறகு விஷாலுடன் இணைகிறேன் என்று கூறியுள்ளார்.

மொட்டை சத்யராஜ்

மொட்டை சத்யராஜ்

இந்தப் படத்தில் சத்யராஜ் நீண்ட நாட்களுக்குப் பின் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அதுவும் ஸ்பெசலாக மொட்டைத்தலையோடு நடித்திருக்கிறார். நூறாவது நாள் படத்தில் மொட்டை போட்ட சத்யராஜ் ரசிகர்களை கவர்ந்தார். இதுவும் ரசிகர்களுக்குப் பிடிக்கும். மேலும் இந்தப்படத்தில் போஜ்புரி நடிகர்களும் நடிக்கிறார்கள்" என்று கூறியுள்ளார் ஹரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X