பவன் கல்யாணுக்கு நான் தான் ஹீரோயின்.. நிதி அகர்வாலை நோகடித்த சத்யராஜ்.. ஏன் அப்படி சொன்னாரு?
சென்னை: ஆந்திராவின் துணை முதல்வராக மாறியுள்ள பவன் கல்யாண் நடித்துள்ள ஹரிஹர வீரமல்லு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. படத்தின் நாயகனான பவன் கல்யாண் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு கடைசி நேரத்தில் ஒரு சில காரணங்களால் அவர் பங்கேற்க முடியாமல் போனது தெரிய வந்து அப்செட் ஆகிவிட்டனர்.
ஆனால், அதற்கு பதிலாக நிகழ்ச்சியை நாயகி நிதி அகர்வால், நடிகர்கள் சத்யராஜ் மற்றும் நாசர் உள்ளிட்ட பலர் சிறப்பாக நடத்தி முடிக்க துணை புரிந்தனர். அதிலும், மேடையேறி நாசர் மற்றும் சத்யராஜ் இருவரும் செய்த அலப்பறைகள் எல்லாம் வேறலெவல் என்று தான் சொல்ல வேண்டும்.

தெலுங்கில் பேசிய தொகுப்பாளினி என்ன சொன்னாங்க, டிரான்ஸ்லேட் பண்ணி சொல்லுங்க என சத்யராஜ் கேட்டது, படத்தின் ஹீரோயினே நான் தான், நித்தி நீ கோவிச்சிக்காதம்மா என பேசியது என விழா மேடையை தெறிக்கவிட்டுவிட்டார் சத்யராஜ்.
ஹரி ஹர வீரமல்லு பாடல் ரிலீஸ்: கிருஷ் ஜகர்லமுடி மற்றும் ஜோதி கிருஷ்ணா இணைந்து இயக்கியுள்ள படம் தான் ஹரி ஹர வீரமல்லு. இந்த படத்தில் பவன் கல்யாண், நித்தி அகர்வால், நர்கிஸ் ஃபக்ரி, பாபி தியோல், சத்யராஜ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஆர்ஆர்ஆர் படத்துக்காக ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். 200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஜூன் 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் படத்தின் "தாரா தாரா" பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. தக் லைஃப் படத்தை போல இந்த படத்தையும் பெரிதளவில் புரமோட் செய்ய பவன் கல்யாண் முடிவு செய்துள்ளார்.

நான் தான் ஹீரோயின்: நடிகர் சத்யராஜ் எப்போதுமே குசும்பு பிடித்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஜாலியாக பேச ஆரம்பித்தாலே அனைவரும் ஹேப்பியாகி விடுவார்கள். இந்நிலையில், இன்று பவன் கல்யாண் வராத நிலையில், அந்த ஸ்டேஜையே ஆக்கிரமித்த சத்யராஜ், இந்த படத்தில் உண்மையான ஹீரோயின் நித்தி அகர்வால் இல்லை என்றும் நான் தான் ஹீரோயின் என்றும் கூறினார். எப்போதுமே படத்தில் ஹீரோவின் வேலை என்ன ஹீரோயினை காப்பாற்றுவது. இந்த படத்தில் பவன் கல்யாண் என்னை தான் காப்பாற்றுகிறார், அப்போ நியாயமா பார்த்தா நான் தானே ஹீரோயின் என படத்தின் முக்கியமான கதையையும் ரிவீல் செய்துவிட்டார் சத்யராஜ்.
நித்தி அகர்வால் பாடல் டிரெண்டாகுது: ஈஸ்வரன், பூமி என கடந்த 2021ம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் உதயநிதி ஸ்டாலினை வைத்து மகிழ் திருமேனி இயக்கிய கலகத் தலைவன் படத்திலும் இவர் தான் ஹீரோயின். சிம்புவை திருமணம் செய்துக்கொள்ளப் போகிறார் என ரூமர்கள் எல்லாம் கிளம்பிய நிலையில், அதற்கு பின் 3 ஆண்டுகள் ஆளே காணோமே என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், ஹரி ஹர வீரமல்லு படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார். அவரது தாரா தாரா பாடல் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பிரபாஸின் ராஜாசாப் படத்திலும் இவர் தான் ஹீரோயின் என்பது கூடுதல் தகவல்.


Click it and Unblock the Notifications











