Sathyaraj: லூசுப் பசங்க! யாருக்குத்தான் கோபம் வராது.. மனைவி குறித்து மோசமான கமெண்ட்.. சத்யராஜ் பளார்
சென்னை: நடிகர் சத்யராஜ் தனது படங்களில் மட்டும் இல்லை நிஜத்திலுமே கொஞ்சம் குசும்பு பிடித்த மனிதர்தான். படங்களில் கூட இவரது லொள்ளுக்கும் குசும்புக்கும் ஒரு மீட்டர் இருக்கும், ஆனால் நிஜத்தில் அளவே இருக்காது. அதேநேரத்தில் சத்யராஜ் தந்தை பெரியாரின் கொள்கைகளை பின்பற்றக் கூடியவர். இதுமட்டும் இல்லாமல் பெரியார் கொள்கைகள் குறித்து அரசியல் மேடைகளில் கலந்து கொண்டு தொடர்ந்து பேசக்கூடியவராகவும் உள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
சத்யராஜ் தற்போது கூலி படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தில் இவரது பெயர், ராஜசேகர். சமீபத்தில் இவர் தனது 70வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்போது கூலி படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், " கூலி படத்தில் உங்களுடன் இணைந்து பணியாற்றியது உண்மையிலேயே எனக்கு மறக்கமுடியாத அமைந்தது. எப்போதும் காலத்திற்கும் மறக்க முடியாத எப்போதும் நினைவு கூறத்தக்கதாக இருக்கும் எனவும், மேலும் உங்களுடன் பாணியாற்றியது சிறந்த படிப்பிணையாக அமைந்தது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சத்யராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக தான் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்துக் கொண்டு இருக்கும் கூலி படம் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியானது. இதுமட்டும் இல்லாமல், தனது குடும்பம் குறித்து இணையவாசிகளின் கமெண்ட்டுக்கும் பதில் அளிக்கும் விதமாக பேசியுள்ளார்.
பொள்ளாச்சி: அதாவது அந்தப் பேட்டியில்," முன்பெல்லாம் அதிகமாக கிரமப்புறக் கதைகள்தானே அதிகம் படம் வெளிவந்தது. எனவே மொத்த திரையுலகமுமே பொள்ளாச்சி மற்றும் கோபிச்செட்டிபாளையத்தில் தான் இருக்கும். கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள லார்ஜ்ஜில் ரூம் இருக்கின்றதா இல்லையா என செக் செய்துவிட்டுத்தான் படத்தின் சூட்டிங் தேதியை தீர்மானிப்பார்கள். நான், விஜயகாந்த், கார்த்தி, பிரபு என எல்லோரும் ஒரே லார்ஜில் இருப்போம். இதில் எனது சொந்த ஊர் கோவை, எனது மனைவியின் ஊர் உடுமலைப்பேட்டை படப்பிடிப்புக்கு மத்தியில் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கவும் காலம் இருந்தது.
லூசுப் பசங்க: இவ்வாறு பேசிக்கொண்டு இருந்த சத்யராஜிடம் அவர் மனைவி குறித்து சில மோசமான கமெண்ட் செய்தவர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. குறிப்பாக, சத்யராஜ் சாமி கும்பிடுவதில்லை. அதனால்தான் இவரது மனைவிக்கு இப்படி நடக்கின்றது என சிலர் கமெண்ட் செய்கின்றனர். இது குறித்து உங்கள் கருத்து என்ன எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், " ஏன் சாமி கும்பிடுறவன் வீட்டுல எவனும் சாகலையா? லூசுப் பசங்க. சாமி கும்புடுறதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. ஏன், சாமி கும்பிடுறவங்க வீட்டில் யாருக்கும் காய்ச்சல் வருவதில்லையா? மாரடைப்பு வருவதில்லையா? விபத்து ஏற்படுவதில்லையா? மரணம் ஏற்படுவதில்லையா? தற்கொலை நடக்கவில்லையா? குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்ற வேன் கவிழ்ந்ததில்லையா?
கதை: இது எங்கயோ உளறுபவர்கள் உளறிக்கொண்டு இருப்பார்கள், அதையெல்லாம் கண்டுக்காமல் இருக்க வேண்டும்" எனக் கூறினார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. நான் எனது வயதுக்கு தகுந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றேன். தற்போது தெலுங்கு படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளேன். அந்தப் படத்தில் கதைதான் கதாநாயகன். அந்தப் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றால் அதுபோன்ற கதையம்சம் கொண்ட படங்கள் எனக்கு கிடைக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











