ஜனநாயகன் ரிலீஸுக்கு வந்த பிரச்னை.. விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த முதல் நடிகர்.. சரியான விஸ்வாசம்
சென்னை: விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகும் என முதலில் அறிவிக்கப்பட்டு; சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. இது விஜய்யின் ரசிகர்களுக்கு உச்சக்கட்ட சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எப்போது ரிலீஸானாலும் பெரிய கொண்டாட்டத்தோடு படத்தை வெற்றியடைய வைக்க உறுதியும் எடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் சிபி சத்யராஜ் இப்படத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் படத்துக்கு சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் தராமல் இழுத்தடிக்கிறார்கள். அவர்கள் சொன்ன மாற்றத்தை படத்தில் செய்த பிறகும் அவர்களது இழுபறி நீடிப்பதால் நீதிமன்றத்துக்கு சென்றது தயாரிப்பு நிறுவனம். நேற்று முன்தினம் வழக்கை விசாரித்த நீதிமன்றமோ; ரிலீஸ் தேதியை ஏன் தள்ளி வைக்கக்கூடாது என கேள்வி கேட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.
ரிலீஸ் இல்லை: கண்டிப்பாக இன்றைக்குள் சென்சார் சான்றிதழ் வாங்குவது இயலாத காரியம் என்பதை புரிந்துகொண்ட பட தயாரிப்பு நிறுவனம் ஒன்பதாம் தேதி ரிலீஸிலிருந்து தள்ளிப்போயுள்ளது. படத்துக்கு பிரச்னை வரும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்; ஆனால் விஜய்யின் கடைசி படம் என்று சொல்லப்பட்டிருக்கும் சூழலில்; இவ்வளவு பெரிய சிக்கல் வரும் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

கொந்தளிக்கும் ரசிகர்கள்: பொங்கல் ரேஸிலிருந்து ஜனநாயகன் வெளியேறியதற்கு திமுகவும், பாஜகவும்தான் கூட்டணி என்று அடித்து சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் தவெகவினர். ஆனால் இதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது அக்கட்சியினரின் கருத்தாக இருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க ஜனநாயகன் படத்துக்கு வந்திருக்கும் பிரச்னை குறித்து திரைத்துறையினர் பெரிதாக ரியாக்ட் செய்யாமல் இருப்பதும் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
என்ன காரணம்?: விஜய் கட்சி ஆரம்பித்து ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சனம் செய்கிறார். இந்த நிலைமையில் ஜனநாயகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் எங்கே தங்களுக்கும் பிரச்னை வருமோ என்ற பயத்தில்தான் பெரும்பாலான ஸ்டார்கள் குரல் எதுவும் கொடுக்காமல் சைலெண்ட் மோடில் இருக்கிறார்கள் எனவும் சோஷியல் மீடியாக்களில் பேச்சுக்கள் கிளம்பியிருக்கின்றன. இந்நிலையில் நடிகரும், சத்யராஜின் மகனுமான சிபி சத்யராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜனநாயகன் வெளியீட்டை சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் மிகப்பெரிய வெற்றிக்கான சரியான மேடையை அமைத்து தருகின்றன. நம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்" என குறிப்பிட்டிருக்கிறார்.
அஜய் ஞானமுத்துவும்: முன்னணி நடிகர்களே இதில் சைலெண்ட்டாக இருக்கும் நிலையில் சிபியின் இந்தப் பதிவு கவனத்தை ஈர்த்திருக்கிறது. முன்னதாக இயக்குநர் அஜய் ஞானமுத்துவும் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது. தனி ஒருவர் மட்டுமே படத்தை உருவாக்கிட முடியாது. அதற்கு பின்னால் நூறு பேரின் உழைப்பும், வாழ்க்கையும் இருக்கிறது. எப்போது தளபதி விஜய்யின் படம் வருகிறதோ அப்போதுதான் தியேட்டருக்கு போவேன்" என தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











