விஜயகாந்த் தான் ரியல் ஹீரோ.. உண்மைச் சம்பவங்களை நினைவுகூர்ந்த சத்யராஜ்!

By Vignesh Selvaraj

Recommended Video

விஜயகாந்தை சந்தித்ததை வாழ்க்கையில் மறக்கவே முடியாது: நாயகி மீனாட்சி- வீடியோ

சென்னை : கேப்டன் விஜயகாந்த் திரைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்காலில் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் திரையுலகப் பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். விஜயகாந்த் பாராட்டுகளை ஏற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த விழாவில் விஜயகாந்த் பற்றி பல சுவையான நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார் சத்யராஜ். அவரது பேச்சுக்கு தொண்டர்கள் மத்தியில் பலத்த ஆரவாரம் எழுந்தது.

விஜயகாந்த்

விஜயகாந்த்

இந்த விழாவில் சத்யராஜ் பேசியதாவது, "நான் எப்போ என் நண்பனைப் பத்திப் பேசினாலும் முதலில் சொல்வது 'திரையுலகில் அள்ளிக்கொடுத்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அதை எங்களுக்கெல்லாம் சொல்லிக் கொடுத்தவர் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த்' என்றுதான்.

முதல் நன்கொடை

முதல் நன்கொடை

தமிழ்நாட்டுல இல்ல இந்தியாவுல எந்த மூலையில யாருக்கு ஒரு கஷ்டம் வந்தாலும் முதல் நன்கொடை அவரோடதா தான் இருக்கும். ஆனா, என்ன பிரச்னைன்னா எக்கச்சக்கமா தூக்கிக் கொடுத்துருவாரு.. எங்களுக்கெல்லாம் பெரிய சிரமமா போயிரும்.

பிரேமலதா

பிரேமலதா

விஜயகாந்த் மனசு தளராம இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் சகோதரி பிரேமலதா. எல்லோருக்கும் உதவி செய்யணும்னு மனசு வந்தா முதல்ல வேணாம்னு சொல்லித் தடுக்குறது அவங்க வீட்டுக்காரம்மாவாத்தான் இருக்கும். எதுக்குங்க கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறத கொண்டுபோய் அங்க கொடுக்கணுமா கேட்பாங்க. ஆனா, பிரேமலதா கொண்டுபோய் கொடுங்கனு சொல்றவங்க.

பிரபாகரன்

பிரபாகரன்

ஈழத்துல போர் உச்சத்துல இருக்கும்போது, பெரியார் திடலில் மணிவண்ணன் எழுதிய நாடகத்தில் நடிச்சு மிகப்பெரிய தொகையை வசூலிச்சு கொடுத்தார் விஜயகாந்த். ஈழத் தமிழர்களுக்காக அவ்வளவு பெரிய தொகையை முதன்முதலில் வசூலித்துக் கொடுத்தது விஜயகாந்த் தான். அதோடு நிக்காம, தன் மகனுக்கு பிரபாகரன்னு பெயரும் வெச்சார் பாருங்க. அதுதான் கெத்து; தில்லு; தூளு!

ரியல் ஹீரோ

ரியல் ஹீரோ

வாழ்க்கைக்கும் சரி, தொழிலுக்கும் சரி, அரசியலுக்கும் சரி.. தைரியம் முக்கியம். வெற்றி தோல்வி வரும் போகும். ஆனா, அந்த தைரியம் இருக்கு பாருங்க. நடிகர் சங்கக் கடனைக் கட்டுவதற்காக முயற்சி எடுத்தபோது, ஒருமுறை மனோரமா ஆச்சி வீட்டுக்குப் போயிட்டு வரும்போது யாரோ ஒருத்தன் ஒரு பொண்ணோட செயினை பறிச்சிட்டு ஓடுனான். விஜயகாந்த், வண்டியில் இருந்து இறங்கி விரட்டிப் பிடிச்சாரு பாருங்க. ரியல் ஹீரோ இவர் தான்.

வள்ளல்

வள்ளல்

எல்லோரும் கேட்டாத்தான் உதவி செய்வாங்க. இவரு கேக்காமலேயே உதவி செய்வார். 'வள்ளல்'னு ஒரு படம் நடிச்சேன். அந்தப் படத்துல ஒரு சிக்கல் வந்துச்சுனு தெரிஞ்சதும் அவராவே போன் பண்ணி அதைத் தீர்த்து வைக்கிறேன்னு சொன்னார். 'மக்கள் என் பக்கம்'னு ஒரு டைட்டில்லயும் படம் நடிச்சேன். இந்த ரெண்டு படங்களுமே அவர் நடிச்சிருக்க வேண்டிய படத்துக்கான டைட்டில்." எனப் பேசினார் சத்யராஜ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X