திருமணம் இல்லாமல் குழந்தை பெறுவதும் சரிதான்.. மகள் திவ்யாவின் கருத்து சரி.. சத்யராஜ் சப்போர்ட்

சென்னை: நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் திருமணம் குறித்தும் தனது நிலைப்பாட்டையும் கருத்தையும் தெரிவித்திருந்தார். அதாவது, திருமணம் என்ற நிறுவனமயமாக்கப்பட்ட விஷயத்தில் எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. குழந்தை பெற்றுக் கொள்ள திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இல்லை என்பது உள்பட சில கருத்துக்கள் தெரிவித்தார். அவரது கருத்துக்கு ஆதாரவும் எதிர்ப்பும் வரவே, நடிகர் சத்யராஜ் தனது மகளின் கருத்துக்கு சப்போர்ட் செய்வதாக தெரிவித்துள்ளார்.

அதாவது, திவ்யா சத்யராஜ் தனது பேட்டியில்,"என்னை பொறுத்தவரையில் இந்த நிறுவனமயமாக்கப்பட்ட திருமணத்தில் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. மோதிரம் மாற்றிக் கொள்வது, தாலி கட்டிக் கொள்வது உள்ளிட்ட எந்த சடங்கு சம்பிரதாயங்கள் மீதும் எனக்கு நம்பிக்கை கிடையாது. திருமணம் செய்து கொள்வதற்கு ஒரே மதம், ஒரே ஜாதி என்று இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. நமக்கு ஒருவரை பிடித்திருக்கிறது என்றால் அவருடன் இணைந்து வாழலாம். அதற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை. அதற்கு இருவரும் ஒரே வீட்டில் இருக்க வேண்டும் என்றும் அவசியம் கிடையாது.

Sathyaraj Supports Divya Sathyaraj on Having Children Without Marriage Viral Statement Sparks Debate

திருமணம் இல்லாமல் குழந்தை: மேலும் திருமணம் செய்து கொண்டு தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் நான் ஏற்க மறுக்கிறேன். திருமணம் செய்து கொள்ளலாம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் அப்படி யாராவது குழந்தை பெற்றுக் கொண்டால் அதை நான் எதிர்க்க மாட்டேன். என்னைப் பொறுத்த வரையில் திருமணமே செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசிக்காமல் இருவரும் தங்களது வீட்டில் வசித்துக் கொண்டே இணைந்து வாழ முடியும்.

பெருமை: எனக்கு ஜாதகம் இல்லை என்பதை நான் பெருமையோடு சொல்லிக் கொள்வேன். அதேபோல் எனது அப்பாவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால் அவர் எனக்கு ஜாதகம் என்ற ஒன்றை எழுதவே இல்லை. அதேபோல் எனக்கும் அதன் மீது நம்பிக்கை கிடையாது, எனக்கும் அது தேவைப்படவில்லை நான் அதை மிகவும் பெருமையாக சொல்வேன்" என்று கூறி இருந்தார்.

Sathyaraj Supports Divya Sathyaraj on Having Children Without Marriage Viral Statement Sparks Debate

சத்யராஜ் ஆதரவு: இவரது கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். அதேபோல் சிலர் எதிர் கருத்து தெரிவித்தனர். இப்படி இருக்கையில், நடிகர் சத்யராஜ் தனது மகளுக்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது, " நான் ஒரு பெருமை மிகு பெரியாரியவாதி. திருமணம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதேபோல் குழந்தை பெற்றுக் கொள்வதும் அவரவர் விருப்பம். இன்றைய மருத்துவ துறை வளர்ச்சியில் திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். அதை எனது மகள் கூறியுள்ளார். அவர் கூறியதில் எந்த தவறும் இல்லை. எனவே நான் எனது மகளின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். அவரது வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X