twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜயகாந்த்தை கலாய்க்கிற மீம் கிரியேட்டர்ஸ் பொடிப்பசங்க... - சத்யராஜ் கலகல பேச்சு!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : விஜயகாந்த் திரைத்துறையில் அறிமுகமாகி 40 ஆண்டுகள் ஆனதையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட தே.மு.தி.க சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய சத்யராஜ், விஜயகாந்த் பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

    சத்யராஜ் பேசியதாவது, "ஈட்டினு ஒரு படத்துக்காக முதுமலையில் ஷூட்டிங். ஒரு யானை என்னைத் தொரத்தணும்.. விஜயகாந்த் வந்து என்னை காப்பாத்தணும். ஆனா அந்த சீன்ல யானை என்னை தொரத்தமாட்டேங்கிது.. விஜயகாந்த் ஒரு ஐடியா கொடுத்தார். யானைக்கு வெல்லம் ரொம்ப பிடிக்கும். ஒரு வெல்லத்தை எடுத்து யானைகிட்ட நல்லா காட்டிருங்க.. அப்புறம் நீங்க ஓடுனா உங்களை தொரத்திரும்.. ஓடும்போதே எங்கிட்டாச்சும் வெல்லத்தை வீசிருங்கனு சொன்னார்.

    Sathyaraj talks about meme creators who trolls Vijayakanth

    நல்ல ஐடியா தான். யானை தொரத்த ஆரம்பிச்சதுக்கு அப்புறம் நான் வெல்லத்தை வீசினதை யானை கவனிக்காம, விடாம என்னைத் தொரத்துச்சுனா என் நிலைமை என்னாகுறதுனு கேட்டேன். விழுந்து விழுந்து சிரிக்கிறாரு. ஷூட்டிங் ஸ்பாட்ல டைரக்டரும் என்னனு கேட்டுட்டு சிரிக்கிறாரு.

    மீம்ஸ் போடறவங்கள விடுங்க பொடிப்பசங்க.. மீம்ஸ் போடறீங்களே.. எங்காளுக்கு இங்கிலீஷ் தெரியாதுனு அதை வெச்சு மீம்ஸ் போடுறீங்க. ஹாலிவுட் நடிகர்களுக்கு தமிழ் தெரியுமா.. ஷாருக்கானுக்கும் சல்மான் கானுக்கும் தமிழ் தெரியுமா? அவங்களுக்கு தமிழ் தெரியாது.. எங்களுக்கு இந்தி, இங்கிலீஷ் தெரியாது.. அவ்ளோதான்.

    மக்களுக்கு என்ன செய்றார்ங்கிறதுதான் முக்கியம். எத்தனை மொழி தெரியுதுங்கிறது முக்கியம் இல்லை. அவருக்கு மொழியே தேவையில்ல.. விரலசைவுலயே புரிய வைப்பார். விஜயகாந்த், பிரபாகரன், சண்முகபாண்டியன் எல்லோரும் நல்லாருக்கணும். ஏன்னா இவர் குடும்பம் நல்லாயிருந்தா பல குடும்பம் நல்லாயிருக்கும்.

    English summary
    Actor Sathyaraj speech about vijayakanth in Vijayakanth 40th year anniversary function. He talked about meme creators who trolling vijayakanth.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X