For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வரலாற்றை திரிப்பவர்களுக்கு தக்க பதிலடி மேதகு.. சத்யராஜ் முதல் ஜிவிபி வரை பகிர்ந்த ட்வீட்கள்!

  |

  சென்னை: ஈழத்தின் விடுதலைக்காக போராடிய விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் பயோபிக் படமாக உருவாகி உள்ள மேதகு இன்று வெளியாகி உள்ளது.

  ஸ்போர்ட்ஸ் படங்கள், பேய் படங்கள் என வரிசை கட்டி ஒரே ஜானரில் ஒவ்வொரு சீசன்களிலும் படங்கள் வருவது வாடிக்கையாகி உள்ளது.

  திடீரென வைரலாகும் நடிகை ஷ்ரேயாவின் டாப்லெஸ் போட்டோ.. கண்டப்படி கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்! திடீரென வைரலாகும் நடிகை ஷ்ரேயாவின் டாப்லெஸ் போட்டோ.. கண்டப்படி கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

  ஈழத் தமிழர்கள் குறித்து சமீபத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் மற்றும் தனுஷின் ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்கள் சர்ச்சையை கிளப்பின.

  சினிமாவில் பிரபாகரன்

  சினிமாவில் பிரபாகரன்

  சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான சமந்தாவின் தி பேமிலி மேன் வெப் தொடரில் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை பாஸ்கரனாக சித்தரித்து மைம் கோபி அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இலங்கையை விட்டு இங்கிலாந்து தப்பிச் செல்வது, மது அருந்தும் காட்சிகளை வைத்து கொச்சைப்படுத்தி இருந்தனர் என கண்டனங்கள் எழுந்தன.

  கடத்தல் மன்னன்

  கடத்தல் மன்னன்

  அதே போல சமீபத்தில் வெளியான தனுஷின் ஜகமே தந்திரம் படத்திலும் ஈழத்தில் இருந்து இங்கிலாந்து வந்த சிவதாஸ் அங்குள்ள அகதிகளை காப்பாற்ற கொள்ளைக் கூட்டத்து தலைவனாக இருப்பதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சித்தரித்ததற்கும் கண்டனங்கள் கிளம்பின.

  மேதகு

  மேதகு

  இந்நிலையில், விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை நேரடியாகவே சித்தரிக்கும் படமாக ‘மேதகு' எனும் டைட்டிலில் உருவாகி உள்ள புதிய படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. கிட்டு எனும் அறிமுக இயக்குநர் ஆழமாக ஆராய்ச்சி செய்து இந்த படத்தை இயக்கி உள்ளாராம்.

  வரலாற்றை திரிப்பவர்களுக்கு

  வரலாற்றை திரிப்பவர்களுக்கு

  மேதகு பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை திரிப்பவர்களுக்கு மேதகு படம் நல்ல பதிலடியாக இருக்கும் என நடிகர் சத்யராஜ் இந்த படத்தின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய இந்த படம் BS value எனும் ஒடிடி தளத்தில் pay per view ஆக வெளியாகி இருக்கிறது.

  முப்படை கட்டி ஆண்ட தமிழன்

  முப்படை கட்டி ஆண்ட தமிழன்

  நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "முப்படை கட்டி ஆண்ட ஒப்பற்ற தமிழரினத்தின் பெருமை மாவீரர் தலைவர் #மேதகு பிரபாகரன் அவர்களின் வரலாற்றை ஒட்டி பதிவு செய்யப்பட்டுள்ள மேதகு மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள்.. here's the link http://bsvalue.com #methagu_in_bsvalue " என படத்தின் லிங்கையும் போட்டு வாழ்த்தி உள்ளார்.

  சேரன் பாராட்டு

  சேரன் பாராட்டு

  "இன்று OTT தளங்களில் வெளியாகும் மூன்று திரைப்படங்களுக்கும் வாழ்த்துக்கள்.. லீனா மணிமேகலையின் மாடத்தியில் தீண்டாமையின் அவலமும்.. கிட்டு தமிழனின் மேதகுவில் விடுதலைக்கான கோபத்தையும்.. SonyLIVன் தேனில் சாமான்யனின் உரிமையும் உணர்வும் பேசப்படுகிறது..." என மூன்று படங்களுக்கு சேர்த்தே வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

  நவீன் ட்வீட்

  நவீன் ட்வீட்

  இன்று முதல் என பதிவிட்டு மேதகு படத்தின் போஸ்டரை ஷேர் செய்து இயக்குநரும் நடிகருமான நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படத்தில் பிரபாகரன் கதாபாத்திரத்தில் குட்டி மணி நடித்துள்ளார். விடுதலை புலிகள் இயக்கத்தை அவர் உருவாக்க அவரை தூண்டிய விஷயங்கள் உள்ளிட்ட இளமை கால பிரபாகரனை காட்சிப்படுத்தி உள்ளனர்.

  English summary
  Actor Sathyaraj, Cheran, Naveen and GV Prakash send wishes to Methagu movie release. This is the biopic of LTTE leader Prabhakaran.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X