மகன் சிபிக்காக ‘பேயாக’ மாறும் சத்யராஜ்!

சென்னை: சிபிராஜ் நடித்து வரும் ஜாக்சன் துரை படத்தில் சத்யராஜ் பேயாக நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவில் இது பேய்க்காலம் எனலாம். தொடர்ந்து பேய்ப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்று வருகின்றன. இந்த நம்பிக்கையில் புதிதாக பல பேய்ப்படங்கள் தயாராகி வருகின்றன.

அந்தவகையில், சிபிராஜ் நடித்து வரும் ஜான்சன் துரை படமும் பேய்ப்படமாகவே உருவாகி வருகிறது.

ஜாக்சன் துரை...

ஜாக்சன் துரை...

பர்மா படத்தை இயக்கிய தரணிதரன் இப்படத்தை இயக்குகிறார். நாய்கள் ஜாக்கிரதைப் படத்திற்குப் பிறகு சிபிராஜ் நடிக்கும் படம் இது. இப்படத்திற்காக 10கிலோ எடை குறைந்துள்ளாராம் சிபிராஜ்.

முதல் சரித்திரப் பேய்ப்படம்...

முதல் சரித்திரப் பேய்ப்படம்...

இந்தியாவின் முதல் சரித்திரப் பேய்ப்படம் என்ற அறிவிப்போடு இப்படம் தயாராகி வருகிறது. ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்எஸ் சரவணன் மிகப் பிரமாண்டமாய் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

பிந்து மாதவி ஜோடி...

பிந்து மாதவி ஜோடி...

கடந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தில் சிபிராஜூக்கு ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார். இவர்கள் தவிர சத்யராஜ், கருணாகரன், ‘நான் கடவுள்' ராஜேந்திரன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

கஞ்ஜூரிங் மேக்கப்...

கஞ்ஜூரிங் மேக்கப்...

தமிழில் முதன் முறையாக ஹாலிவுட் நடிகர் ஜாக்கெரி இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். ஹாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற கஞ்ஜூரிங் படத்தின் ஒப்பனை தொழில் நுட்பம் இப்படத்தில் பயன்படுத்தப்படுகிறது.

பிரமாண்ட அரங்குகள்...

பிரமாண்ட அரங்குகள்...

இப்படத்தின் கதை, திரைக்கதை 1940 - ல் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் நடப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, மிகுந்த பொருள் செலவில் மிக பிரமாண்டமாக அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

பேயாக சத்யராஜ்...

பேயாக சத்யராஜ்...

இந்நிலையில், இப்படத்தில் சத்யராஜ் பேய் வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஆண் பேய்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த வரிசையில் சத்யராஜூம் இணைந்து விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X