»   »  "தேவுடாவுக்கு மிரட்டல் சத்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ள தேவுடா படத்தை திரையிட விடமாட்டோம் என்று நடிகர் சங்கத்திற்கு மிரட்டல் கடிதம்வந்துள்ளது.தற்போது தமிழ்த் திரையுலகில் யார் கைவசம் அதிக படங்கள் உள்ளன என்று கேட்டால், முன்னணியில் இருக்கும் இளம்நாயகர்கள் தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால் அவர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு அதிக படங்களை கைவசம்வைத்திருப்பவர் சத்யராஜ் என்றால் நம்ப முடிகிறதா? நம்பினால் நம்புங்கள், அது தான் உண்மை. சமீபத்தில் வெளிவந்த சத்யராஜின் சில படங்கள் தயாரிப்பாளர்களின் கைகளைபதம் பார்க்காமல் ஓரளவுக்கு நல்ல லாபத்தை தந்துள்ளது. இதனால் இவருக்கு அடுத்தடுத்து படங்கள் புக்கான வண்ணமாகஉள்ளது.இந்த வரிசையில் இவர் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் தான் தேவுடா. சத்யராஜின் படமென்றாலேநக்கலுக்கும், ஜொள்ளுக்கும் குறைவிருக்காது என்று அனைவருக்குமே தெரியும்.இதே போல இந்தப் படத்தில் சாமியார்களை நக்கல் செய்வது போல சத்யராஜ் நடித்துள்ளார். பொதுமக்களை நம்ப வைத்துஏமாற்றும் போலி சாமியாராக இதில் அவர் நடித்துள்ளார். வெளியில் நல்ல சாமியாராக நடித்து அண்டர்கிரவுண்டில் "பலானவேலை பார்ப்பாராம்.பூஜை போடுவதற்கு முன்பே கோலிவுட்டில் இந்தப் படத்தைப் பற்றி பரபரப்பாக பேசப்பட்டது. சங்கராச்சாரியாரை விமர்சிக்கும்விதத்தில் இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டிருப்பதாக பேசப்பட்டது.இது குறித்து சத்யராஜிடம் கேட்ட போது, நான் சங்கராச்சாரியார் வேடத்தில் நடிக்கவில்லை. அது போல ஒரு எண்ணம் வந்துவிடக்கூடாது என்பதற்காத் தான் தெலுங்கு சாமியார் போன்ற தோற்றத்தில் நடித்துள்ளேன் என்று கூறினார்.இந் நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில், தேவுடா படத்தை திரைக்கு வரவிடமாட்டோம். இந்து சாமியார்களை விமர்சித்தும், கிண்டல் செய்தும் படங்களை எடுக்கிறீர்கள்.மற்ற மதத்தினரை விமர்சித்து உங்களால் படமெடுக்க முடியுமா? என்று குறிப்பிடப்பட்டிருந்தது.இந்தப் படத்திற்கு இந்து முன்னணியும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணி மாநில செயலாளர்சுப்பிரமணியன் விடுத்துள்ள ஒரு அறிக்கையில், சமீப காலமாக தமிழ்த் திரைப்படங்களில் இந்து சாமியார்களை கிண்டல்செய்வது போன்றும், இந்து மதத்தை இழிவு படுத்துவது போலவும் காட்சிகள் வருகின்றன.தற்போது சத்யராஜ் நடித்து வரும் தேவுடா படத்தில் இந்து சாமியார்களை கிண்டல் செய்வது போல நடித்துள்ளார். இந்தப் படம்வெளிவந்தால் நாங்கள் கடுமையாக எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

"தேவுடாவுக்கு மிரட்டல் சத்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ள தேவுடா படத்தை திரையிட விடமாட்டோம் என்று நடிகர் சங்கத்திற்கு மிரட்டல் கடிதம்வந்துள்ளது.தற்போது தமிழ்த் திரையுலகில் யார் கைவசம் அதிக படங்கள் உள்ளன என்று கேட்டால், முன்னணியில் இருக்கும் இளம்நாயகர்கள் தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால் அவர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு அதிக படங்களை கைவசம்வைத்திருப்பவர் சத்யராஜ் என்றால் நம்ப முடிகிறதா? நம்பினால் நம்புங்கள், அது தான் உண்மை. சமீபத்தில் வெளிவந்த சத்யராஜின் சில படங்கள் தயாரிப்பாளர்களின் கைகளைபதம் பார்க்காமல் ஓரளவுக்கு நல்ல லாபத்தை தந்துள்ளது. இதனால் இவருக்கு அடுத்தடுத்து படங்கள் புக்கான வண்ணமாகஉள்ளது.இந்த வரிசையில் இவர் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் தான் தேவுடா. சத்யராஜின் படமென்றாலேநக்கலுக்கும், ஜொள்ளுக்கும் குறைவிருக்காது என்று அனைவருக்குமே தெரியும்.இதே போல இந்தப் படத்தில் சாமியார்களை நக்கல் செய்வது போல சத்யராஜ் நடித்துள்ளார். பொதுமக்களை நம்ப வைத்துஏமாற்றும் போலி சாமியாராக இதில் அவர் நடித்துள்ளார். வெளியில் நல்ல சாமியாராக நடித்து அண்டர்கிரவுண்டில் "பலானவேலை பார்ப்பாராம்.பூஜை போடுவதற்கு முன்பே கோலிவுட்டில் இந்தப் படத்தைப் பற்றி பரபரப்பாக பேசப்பட்டது. சங்கராச்சாரியாரை விமர்சிக்கும்விதத்தில் இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டிருப்பதாக பேசப்பட்டது.இது குறித்து சத்யராஜிடம் கேட்ட போது, நான் சங்கராச்சாரியார் வேடத்தில் நடிக்கவில்லை. அது போல ஒரு எண்ணம் வந்துவிடக்கூடாது என்பதற்காத் தான் தெலுங்கு சாமியார் போன்ற தோற்றத்தில் நடித்துள்ளேன் என்று கூறினார்.இந் நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில், தேவுடா படத்தை திரைக்கு வரவிடமாட்டோம். இந்து சாமியார்களை விமர்சித்தும், கிண்டல் செய்தும் படங்களை எடுக்கிறீர்கள்.மற்ற மதத்தினரை விமர்சித்து உங்களால் படமெடுக்க முடியுமா? என்று குறிப்பிடப்பட்டிருந்தது.இந்தப் படத்திற்கு இந்து முன்னணியும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணி மாநில செயலாளர்சுப்பிரமணியன் விடுத்துள்ள ஒரு அறிக்கையில், சமீப காலமாக தமிழ்த் திரைப்படங்களில் இந்து சாமியார்களை கிண்டல்செய்வது போன்றும், இந்து மதத்தை இழிவு படுத்துவது போலவும் காட்சிகள் வருகின்றன.தற்போது சத்யராஜ் நடித்து வரும் தேவுடா படத்தில் இந்து சாமியார்களை கிண்டல் செய்வது போல நடித்துள்ளார். இந்தப் படம்வெளிவந்தால் நாங்கள் கடுமையாக எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

சத்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ள தேவுடா படத்தை திரையிட விடமாட்டோம் என்று நடிகர் சங்கத்திற்கு மிரட்டல் கடிதம்வந்துள்ளது.

தற்போது தமிழ்த் திரையுலகில் யார் கைவசம் அதிக படங்கள் உள்ளன என்று கேட்டால், முன்னணியில் இருக்கும் இளம்நாயகர்கள் தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால் அவர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு அதிக படங்களை கைவசம்வைத்திருப்பவர் சத்யராஜ் என்றால் நம்ப முடிகிறதா?

நம்பினால் நம்புங்கள், அது தான் உண்மை. சமீபத்தில் வெளிவந்த சத்யராஜின் சில படங்கள் தயாரிப்பாளர்களின் கைகளைபதம் பார்க்காமல் ஓரளவுக்கு நல்ல லாபத்தை தந்துள்ளது. இதனால் இவருக்கு அடுத்தடுத்து படங்கள் புக்கான வண்ணமாகஉள்ளது.

இந்த வரிசையில் இவர் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் தான் தேவுடா. சத்யராஜின் படமென்றாலேநக்கலுக்கும், ஜொள்ளுக்கும் குறைவிருக்காது என்று அனைவருக்குமே தெரியும்.

இதே போல இந்தப் படத்தில் சாமியார்களை நக்கல் செய்வது போல சத்யராஜ் நடித்துள்ளார். பொதுமக்களை நம்ப வைத்துஏமாற்றும் போலி சாமியாராக இதில் அவர் நடித்துள்ளார். வெளியில் நல்ல சாமியாராக நடித்து அண்டர்கிரவுண்டில் "பலானவேலை பார்ப்பாராம்.

பூஜை போடுவதற்கு முன்பே கோலிவுட்டில் இந்தப் படத்தைப் பற்றி பரபரப்பாக பேசப்பட்டது. சங்கராச்சாரியாரை விமர்சிக்கும்விதத்தில் இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டிருப்பதாக பேசப்பட்டது.

இது குறித்து சத்யராஜிடம் கேட்ட போது, நான் சங்கராச்சாரியார் வேடத்தில் நடிக்கவில்லை. அது போல ஒரு எண்ணம் வந்துவிடக்கூடாது என்பதற்காத் தான் தெலுங்கு சாமியார் போன்ற தோற்றத்தில் நடித்துள்ளேன் என்று கூறினார்.

இந் நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில், தேவுடா படத்தை திரைக்கு வரவிடமாட்டோம். இந்து சாமியார்களை விமர்சித்தும், கிண்டல் செய்தும் படங்களை எடுக்கிறீர்கள்.

மற்ற மதத்தினரை விமர்சித்து உங்களால் படமெடுக்க முடியுமா? என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தப் படத்திற்கு இந்து முன்னணியும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணி மாநில செயலாளர்சுப்பிரமணியன் விடுத்துள்ள ஒரு அறிக்கையில், சமீப காலமாக தமிழ்த் திரைப்படங்களில் இந்து சாமியார்களை கிண்டல்செய்வது போன்றும், இந்து மதத்தை இழிவு படுத்துவது போலவும் காட்சிகள் வருகின்றன.

தற்போது சத்யராஜ் நடித்து வரும் தேவுடா படத்தில் இந்து சாமியார்களை கிண்டல் செய்வது போல நடித்துள்ளார். இந்தப் படம்வெளிவந்தால் நாங்கள் கடுமையாக எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil