»   »  விஜயகாந்த் ஜெயிப்பார் -கூறுகிறார் சத்யராஜ் சினிமாவில் ஜெயித்ததைப் போல அரசியலிலும் விஜயகாந்த் வெற்றி காண்பார் என்று "மகா நடிகன் சத்யராஜ் கூறியுள்ளார். மகன் சிபிராஜுடன் இணைந்து சத்யராஜ் நடிக்கும் வேல்வேல் படத்தின் ஷூட்டிங் கோபிச் செட்டிப்பாளையம் சுற்றுப்புறப்பகுதிகளில் தொடங்கியுள்ளது. இதில் சத்யராஜுக்கு ஜோடியாக குஷ்புவும், சிபிக்கு ஜோடியாக நிகிதாவும் நடிக்கிறார்கள். ஷூட்டிங் இடைவேளையில் சத்யராஜ் கூறுகையில், விஜயகாந்த் எதையும் திட்டமிட்டு செய்வார். இப்போது என்றில்லை அவர்என்னுடன் சேர்ந்து நடிப்புக் கல்லூரியில் படிக்கும்போதே அப்படித் தான். சினிமாவில் அவர் வெற்றி பெற்றவர், சாதனைபடைத்தவர். அதேபோல, இப்போது அரசியலிலும் அவர் சாதிப்பார், வெற்றி பெறுவார். அவருக்கென தனி இடம் அரசியலில் கிடைக்கும்.கிராமப் பகுதிகளில் விஜயகாந்துக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. எனவே அரசியலில் அவருடன் கூட்டணி சேர பலரும்துடிக்கிறார்கள். ஆனால் அவர் யாருடன் கூட்டணி வைப்பார் என்பது எனக்குத் தெரியாது. இப்போதைக்கு மக்களுடன் அவர் கூட்டணிவைத்துள்ளார் என்பது மட்டும் தெளிவாகிறது. மக்களிடம் கடவுள் நம்பிக்கை இன்னும் போகவில்லை. பெரியாரின் கருத்துக்கள் மக்களை இன்னும் முழுமையாக சென்றடையவில்லை என்பதையே இது காட்டுகிறது. எந்தஜாதியை எடுத்தாலும் கடவுள் நம்பிக்கை தான் மேலோங்கி நிற்கிறது. கடவுள் பெயரைச் சொல்லித் தான் எதையும்செய்கிறார்கள். கடவுள் பெயரைச் சொல்லி பல இடங்களில் வன்முறையும் நடக்கிறது. ஆனால் அந்த இடங்களுக்கு கடவுள் வந்துபாதிக்கப்பட்டவர்களையும், பாதிப்பை ஏற்படுத்துகிறவர்களையும் காப்பாற்ற மாட்டார். இது மக்களுக்குப் புரியவில்லை. முதலில் கடவுளுக்கே இங்கு பாதுகாப்பில்லை. போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் நிலையில் தான் கடவுளே இருக்கிறார். இந்தக் கால சினிமா நடிகர்களில் விஜய்க்கு ரசிகர் செல்வாக்கு அதிகம் உள்ளது. அனேகமாக அடுத்த சூப்பர் ஸ்டாராக அவர்வருவார் என்று நினைக்கிறேன். எங்கே போனாலும் விஜய் பாட்டுத் தான் டாப்பில் இருக்கிறது என்றார் சத்யராஜ்.

விஜயகாந்த் ஜெயிப்பார் -கூறுகிறார் சத்யராஜ் சினிமாவில் ஜெயித்ததைப் போல அரசியலிலும் விஜயகாந்த் வெற்றி காண்பார் என்று "மகா நடிகன் சத்யராஜ் கூறியுள்ளார். மகன் சிபிராஜுடன் இணைந்து சத்யராஜ் நடிக்கும் வேல்வேல் படத்தின் ஷூட்டிங் கோபிச் செட்டிப்பாளையம் சுற்றுப்புறப்பகுதிகளில் தொடங்கியுள்ளது. இதில் சத்யராஜுக்கு ஜோடியாக குஷ்புவும், சிபிக்கு ஜோடியாக நிகிதாவும் நடிக்கிறார்கள். ஷூட்டிங் இடைவேளையில் சத்யராஜ் கூறுகையில், விஜயகாந்த் எதையும் திட்டமிட்டு செய்வார். இப்போது என்றில்லை அவர்என்னுடன் சேர்ந்து நடிப்புக் கல்லூரியில் படிக்கும்போதே அப்படித் தான். சினிமாவில் அவர் வெற்றி பெற்றவர், சாதனைபடைத்தவர். அதேபோல, இப்போது அரசியலிலும் அவர் சாதிப்பார், வெற்றி பெறுவார். அவருக்கென தனி இடம் அரசியலில் கிடைக்கும்.கிராமப் பகுதிகளில் விஜயகாந்துக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. எனவே அரசியலில் அவருடன் கூட்டணி சேர பலரும்துடிக்கிறார்கள். ஆனால் அவர் யாருடன் கூட்டணி வைப்பார் என்பது எனக்குத் தெரியாது. இப்போதைக்கு மக்களுடன் அவர் கூட்டணிவைத்துள்ளார் என்பது மட்டும் தெளிவாகிறது. மக்களிடம் கடவுள் நம்பிக்கை இன்னும் போகவில்லை. பெரியாரின் கருத்துக்கள் மக்களை இன்னும் முழுமையாக சென்றடையவில்லை என்பதையே இது காட்டுகிறது. எந்தஜாதியை எடுத்தாலும் கடவுள் நம்பிக்கை தான் மேலோங்கி நிற்கிறது. கடவுள் பெயரைச் சொல்லித் தான் எதையும்செய்கிறார்கள். கடவுள் பெயரைச் சொல்லி பல இடங்களில் வன்முறையும் நடக்கிறது. ஆனால் அந்த இடங்களுக்கு கடவுள் வந்துபாதிக்கப்பட்டவர்களையும், பாதிப்பை ஏற்படுத்துகிறவர்களையும் காப்பாற்ற மாட்டார். இது மக்களுக்குப் புரியவில்லை. முதலில் கடவுளுக்கே இங்கு பாதுகாப்பில்லை. போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் நிலையில் தான் கடவுளே இருக்கிறார். இந்தக் கால சினிமா நடிகர்களில் விஜய்க்கு ரசிகர் செல்வாக்கு அதிகம் உள்ளது. அனேகமாக அடுத்த சூப்பர் ஸ்டாராக அவர்வருவார் என்று நினைக்கிறேன். எங்கே போனாலும் விஜய் பாட்டுத் தான் டாப்பில் இருக்கிறது என்றார் சத்யராஜ்.

Subscribe to Oneindia Tamil

சினிமாவில் ஜெயித்ததைப் போல அரசியலிலும் விஜயகாந்த் வெற்றி காண்பார் என்று "மகா நடிகன் சத்யராஜ் கூறியுள்ளார்.

மகன் சிபிராஜுடன் இணைந்து சத்யராஜ் நடிக்கும் வேல்வேல் படத்தின் ஷூட்டிங் கோபிச் செட்டிப்பாளையம் சுற்றுப்புறப்பகுதிகளில் தொடங்கியுள்ளது. இதில் சத்யராஜுக்கு ஜோடியாக குஷ்புவும், சிபிக்கு ஜோடியாக நிகிதாவும் நடிக்கிறார்கள்.

ஷூட்டிங் இடைவேளையில் சத்யராஜ் கூறுகையில், விஜயகாந்த் எதையும் திட்டமிட்டு செய்வார். இப்போது என்றில்லை அவர்என்னுடன் சேர்ந்து நடிப்புக் கல்லூரியில் படிக்கும்போதே அப்படித் தான். சினிமாவில் அவர் வெற்றி பெற்றவர், சாதனைபடைத்தவர்.

அதேபோல, இப்போது அரசியலிலும் அவர் சாதிப்பார், வெற்றி பெறுவார். அவருக்கென தனி இடம் அரசியலில் கிடைக்கும்.கிராமப் பகுதிகளில் விஜயகாந்துக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. எனவே அரசியலில் அவருடன் கூட்டணி சேர பலரும்துடிக்கிறார்கள்.

ஆனால் அவர் யாருடன் கூட்டணி வைப்பார் என்பது எனக்குத் தெரியாது. இப்போதைக்கு மக்களுடன் அவர் கூட்டணிவைத்துள்ளார் என்பது மட்டும் தெளிவாகிறது. மக்களிடம் கடவுள் நம்பிக்கை இன்னும் போகவில்லை.


பெரியாரின் கருத்துக்கள் மக்களை இன்னும் முழுமையாக சென்றடையவில்லை என்பதையே இது காட்டுகிறது. எந்தஜாதியை எடுத்தாலும் கடவுள் நம்பிக்கை தான் மேலோங்கி நிற்கிறது. கடவுள் பெயரைச் சொல்லித் தான் எதையும்செய்கிறார்கள்.

கடவுள் பெயரைச் சொல்லி பல இடங்களில் வன்முறையும் நடக்கிறது. ஆனால் அந்த இடங்களுக்கு கடவுள் வந்துபாதிக்கப்பட்டவர்களையும், பாதிப்பை ஏற்படுத்துகிறவர்களையும் காப்பாற்ற மாட்டார். இது மக்களுக்குப் புரியவில்லை.

முதலில் கடவுளுக்கே இங்கு பாதுகாப்பில்லை. போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் நிலையில் தான் கடவுளே இருக்கிறார்.

இந்தக் கால சினிமா நடிகர்களில் விஜய்க்கு ரசிகர் செல்வாக்கு அதிகம் உள்ளது. அனேகமாக அடுத்த சூப்பர் ஸ்டாராக அவர்வருவார் என்று நினைக்கிறேன். எங்கே போனாலும் விஜய் பாட்டுத் தான் டாப்பில் இருக்கிறது என்றார் சத்யராஜ்.


Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil