சத்யராஜ் படத்திற்கு தடை கோரி வழக்கு சத்யராஜ் நடித்துள்ள சுயேச்சை எம்.எல்.ஏ. படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி எல்.ஐ.சி. வீட்டு வசதிக் கடன்கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது. சத்யராஜ், கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சுயேச்சை எம்.எல்.ஏ. நீண்ட காலமாக தயாரிப்பில் உள்ள இப்படம்விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை எல்.ஐ.சி வீட்டு வசதி கடன் கழக கிளை மேலாளர்எம்.ஏ. காதர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.அதில், சென்னையைச் சேர்ந்த கோவிந்தராஜன், அன்பழகன், மரியா, ஸ்டான்லி, சுகுமார், கருணாநிதி, வரதராஜன் ஆகியோர்எங்களது நிறுவனத்தில் வீடு கட்டுவதற்காக ரூ. 50 லட்சம் வாங்கினர். ஆனால் அதை இன்னும் திருப்பிச் செலுத்தவில்லை. இந்தநிலையில் ஆந்திரா வங்கியிலும் அவர்கள் வீட்டுக் கடன் வாங்கியுள்ளனர்.மேலும் வீட்டுக் கடனுக்காக அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களும் போலியானவை என்று தெரிய வந்தது. இந்த நிலையில்எங்களிடம் வீட்டுக் கடன் வாங்கியவர்களில் ஒருவரான ஸ்டான்லி என்பவர் சுயேச்சை எம்.எல்.ஏ. என்ற பெயரில் படத்தைத்தயாரித்துள்ளார். கடன் மற்ற 6 பேரும் இதில் இணைத் தயாரிப்பாளர்களாக உள்ளனர்.வீட்டுக் கடன் என்ற பெயரில் கடன் வாங்கி அதைக் கொண்டு அவர்கள் படம்த யாரித்துள்ளனர். எனவே அவர்கள் படத்தைத்திரையிட தடை விதித்தும், படச் சுருளை நீதிமன்றம் நியமிக்கும் அதிகாரியிடம் ஒப்படைக்கும்படியும் உத்தரவிட வேண்டும்என்று கோரப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

By Staff

சத்யராஜ் நடித்துள்ள சுயேச்சை எம்.எல்.ஏ. படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி எல்.ஐ.சி. வீட்டு வசதிக் கடன்கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது.

சத்யராஜ், கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சுயேச்சை எம்.எல்.ஏ. நீண்ட காலமாக தயாரிப்பில் உள்ள இப்படம்விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை எல்.ஐ.சி வீட்டு வசதி கடன் கழக கிளை மேலாளர்எம்.ஏ. காதர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.

அதில், சென்னையைச் சேர்ந்த கோவிந்தராஜன், அன்பழகன், மரியா, ஸ்டான்லி, சுகுமார், கருணாநிதி, வரதராஜன் ஆகியோர்எங்களது நிறுவனத்தில் வீடு கட்டுவதற்காக ரூ. 50 லட்சம் வாங்கினர். ஆனால் அதை இன்னும் திருப்பிச் செலுத்தவில்லை. இந்தநிலையில் ஆந்திரா வங்கியிலும் அவர்கள் வீட்டுக் கடன் வாங்கியுள்ளனர்.

மேலும் வீட்டுக் கடனுக்காக அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களும் போலியானவை என்று தெரிய வந்தது. இந்த நிலையில்எங்களிடம் வீட்டுக் கடன் வாங்கியவர்களில் ஒருவரான ஸ்டான்லி என்பவர் சுயேச்சை எம்.எல்.ஏ. என்ற பெயரில் படத்தைத்தயாரித்துள்ளார். கடன் மற்ற 6 பேரும் இதில் இணைத் தயாரிப்பாளர்களாக உள்ளனர்.

வீட்டுக் கடன் என்ற பெயரில் கடன் வாங்கி அதைக் கொண்டு அவர்கள் படம்த யாரித்துள்ளனர். எனவே அவர்கள் படத்தைத்திரையிட தடை விதித்தும், படச் சுருளை நீதிமன்றம் நியமிக்கும் அதிகாரியிடம் ஒப்படைக்கும்படியும் உத்தரவிட வேண்டும்என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X