சத்யராஜ் படத்தை வெளியிட தடை சத்யராஜ் நடித்துள்ள சுயேச்சை எம்.எல்.ஏ. படத்தை திரையிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.சத்யராஜ், கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சுயேச்சை எம்.எல்.ஏ. இப்படத்தை சென்னை முகப்பேரைச் சேர்ந்தஸ்டான்லி உள்ளிட்ட 7 பேர் தயாரித்துள்ளனர். படம் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.இந்த நிலையில் தேனாம்பேட்டை எல்.ஐ.சி வீட்டு வசதி கடன் கழக கிளை மேலாளர் அப்துல் காதர் என்பவர் உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தார். அதில், வீட்டுக் கடனாக ரூ. 50 லட்சம் பணத்தை வாங்கி விட்டு ஸ்டான்லி உள்ளிட்டவர்கள் அப்பணத்தைக்கொண்டு சுயேச்சை எம்.எல்.ஏ. படத்தைத் தயாரித்துள்ளனர். மேலும் ஆந்திரா வங்கியிலும் இவர்கள் கடன் வாங்கியுள்ளனர்.எனவே படத்தைத் திரையிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.இந்த மனுவை நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா விசாரித்தார். பின்னர் இப்படத்தைத் திரையிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்தார்.மேலும், படச் சுருளை (ஃபிலிம்) நீதிமன்ற அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
சத்யராஜ் நடித்துள்ள சுயேச்சை எம்.எல்.ஏ. படத்தை திரையிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
சத்யராஜ், கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சுயேச்சை எம்.எல்.ஏ. இப்படத்தை சென்னை முகப்பேரைச் சேர்ந்தஸ்டான்லி உள்ளிட்ட 7 பேர் தயாரித்துள்ளனர். படம் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.
இந்த நிலையில் தேனாம்பேட்டை எல்.ஐ.சி வீட்டு வசதி கடன் கழக கிளை மேலாளர் அப்துல் காதர் என்பவர் உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தார். அதில், வீட்டுக் கடனாக ரூ. 50 லட்சம் பணத்தை வாங்கி விட்டு ஸ்டான்லி உள்ளிட்டவர்கள் அப்பணத்தைக்கொண்டு சுயேச்சை எம்.எல்.ஏ. படத்தைத் தயாரித்துள்ளனர். மேலும் ஆந்திரா வங்கியிலும் இவர்கள் கடன் வாங்கியுள்ளனர்.எனவே படத்தைத் திரையிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மனுவை நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா விசாரித்தார். பின்னர் இப்படத்தைத் திரையிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்தார்.மேலும், படச் சுருளை (ஃபிலிம்) நீதிமன்ற அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications