சுஹாசினிக்கு நடிகர்கள் கண்டனம் சென்னை:சுஹாசினி குஷ்புக்கு ஆதரவாக சொன்ன கருத்துக்கு நடிகர்கள் சத்யராஜ், வடிவேலு கண்டனம் தெரிவித்துள்ளனர்.இது குறித்து சத்யராஜ் கூறியதாவது:நடிகர், நடிகைகள் பேச்சை நாடே உற்று கவனித்துக் கொண்டு இருக்கிறது. அவர்கள் நல்லதைப் பேசினாலும்அதற்கேற்றாற் போல் பல மடங்கு விளைவு ஏற்படும்.பிரபலமடைந்ததற்கான விலை அது. எனவே நடிகர், நடிகைகள் பொது மேடைகளில் பேசும் போது கவனமாகஇருக்க வேண்டியது அவசியம். முடிந்து போன ஒரு பிரச்சினையை மீண்டும் கிளறி சர்ச்சையை எழுப்புவது கொம்புசீவி விடுவதுபோல சுஹாசினி பேசியதைத் தவிர்த்து இருக்கலாம்.குஷ்புவிடம் தனிப்பட்ட முறையில் தனது ஆதரவையும், வருத்தத்தையும் தெரிவித்திருக்கலாம் என்றார். காமெடி நடிகர் வடிவேலு கூறியிருப்பதாவது:குஷ்புவால் ஏற்பட்ட பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்க எல்லோரும் பாடுபட்டோம். அது ஒரு வழியாகமுடிவுக்கு வந்தது. ஆனால் சுஹாசினி இப்போது தேவையில்லாமல் அந்த விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டுஎல்லோரையும் வம்புக்கு இழுப்பது போல் பேசியுள்ளார்.தமிழர்களுக்கு கொம்பா முளைத்துள்ளது என்று அவர் பேசியதை தமிழன் என்ற முறையில் வன்மையாககண்டிக்கிறேன். தமிழர்கள் சார்பில் மன்னிப்பு கேட்க இவர் யார்?இவர் என்ன ஒட்டு மொத்த தமிழர்களுக்கு அத்தாட்சியா?என்னிடம் கேட்டிருந்தால் கிழித்திருப்பேன் என்ற சுஹாசினி எதைக் கிழிக்கப் போகிறார்? அவரது பேச்சு மற்றநடிகர், நடிகைகளுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றார்.
சென்னை:
சுஹாசினி குஷ்புக்கு ஆதரவாக சொன்ன கருத்துக்கு நடிகர்கள் சத்யராஜ், வடிவேலு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சத்யராஜ் கூறியதாவது:
நடிகர், நடிகைகள் பேச்சை நாடே உற்று கவனித்துக் கொண்டு இருக்கிறது. அவர்கள் நல்லதைப் பேசினாலும்அதற்கேற்றாற் போல் பல மடங்கு விளைவு ஏற்படும்.
பிரபலமடைந்ததற்கான விலை அது. எனவே நடிகர், நடிகைகள் பொது மேடைகளில் பேசும் போது கவனமாகஇருக்க வேண்டியது அவசியம். முடிந்து போன ஒரு பிரச்சினையை மீண்டும் கிளறி சர்ச்சையை எழுப்புவது கொம்புசீவி விடுவதுபோல சுஹாசினி பேசியதைத் தவிர்த்து இருக்கலாம்.
குஷ்புவிடம் தனிப்பட்ட முறையில் தனது ஆதரவையும், வருத்தத்தையும் தெரிவித்திருக்கலாம் என்றார்.
காமெடி நடிகர் வடிவேலு கூறியிருப்பதாவது:
குஷ்புவால் ஏற்பட்ட பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்க எல்லோரும் பாடுபட்டோம். அது ஒரு வழியாகமுடிவுக்கு வந்தது. ஆனால் சுஹாசினி இப்போது தேவையில்லாமல் அந்த விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டுஎல்லோரையும் வம்புக்கு இழுப்பது போல் பேசியுள்ளார்.
தமிழர்களுக்கு கொம்பா முளைத்துள்ளது என்று அவர் பேசியதை தமிழன் என்ற முறையில் வன்மையாககண்டிக்கிறேன். தமிழர்கள் சார்பில் மன்னிப்பு கேட்க இவர் யார்?
இவர் என்ன ஒட்டு மொத்த தமிழர்களுக்கு அத்தாட்சியா?
என்னிடம் கேட்டிருந்தால் கிழித்திருப்பேன் என்ற சுஹாசினி எதைக் கிழிக்கப் போகிறார்? அவரது பேச்சு மற்றநடிகர், நடிகைகளுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications