twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கற்பு ஒரு கற்பனை- சத்யராஜ் கருத்து சுதந்திரத்தை வன்முறை மூலம் தடுக்க முயன்றால் காந்திக்கு நேர்ந்த கதைதான் நடக்கும் என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர்இணைந்து ஏற்படுத்தியுள்ள கருத்து அமைப்பின் முதல் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் நடிகர் சத்யராஜ், இந்தியன்எக்ஸ்பிரஸ் சென்னைப் பதிப்பு ஆசிரியர் சுசீலா ரவீந்திரநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.இக் கூட்டத்தில் சத்யராஜ் பேசுகையில், கருத்து சுதந்திரத்தைத் தடுக்கக் கூடாது. கருத்து பரிமாற்றம், கருத்து சிந்தனைஆகியவையால் உலகம் வளருகிறது. கருத்து சுதந்திரம் மிக முக்கியமான விஷயம். காந்தி சொன்ன கருத்தை ஏற்க முடியாமல்கோட்சே அவரை சுட்டான். கருத்து சுதந்திரம் வன்முறையாக மாறினால் காந்தி கதையில்தான் முடியும்.கருத்தற்ற மனநிலை இருக்க வேண்டும். அப்போதுதான் பிறர் கூறும் கருத்துக்களை யோசிக்க முடியும், ரசிக்க முடியும்.குஷ்பு பற்றி பேச வேண்டியதாகியுள்ளது. அவரைப் பற்றிப் பேச என்ன அவசியம் வந்து விட்டது? கற்பு கற்பனையான விஷயம்.அது ஆண்களின் திருட்டுப் புத்தியால் வந்தது. அதைப் பேசுவதே மிகவும் சிரமமான விஷயம்.பெண்களும், மகளிர் அமைப்புகளும் இதைப் பற்றிப் பேசி விட்டுப் போகட்டும். ஆண்களுக்கு இதில் என்ன வேலை? அவர்கள்கற்புக்காக கொடி பிடிக்க வேண்டாம்.இதுக்கு மேல் நான் அதிகம் பேச முடியாது. அப்படிப் பேசினால் என்னையும் சிக்கலில் கொண்டு போய் விட்டு விடுவார்கள்.அப்புறம் ஒழுங்காக வீடு போய்ச் சேர முடியாது. நாங்கள் சூழ்நிலைக் கைதிகள். மூஞ்சியில் முட்டை வீசுவார்கள், காரில் குண்டுபோடுவார்கள்.என்னை நம்பி 10 பேர் படம் எடுக்கிறார்கள். அவர்களுக்கு சிரமம் ஏற்பட நான் காரணமாக இருக்கக் கூடாது. அதனால்கருத்துக்களை சுதந்திரமாகக் கூறக் கூடிய இந்த இடத்தில் கூட நான் எனது இஷ்டத்திற்குப் பேச முடியாத நிலை உள்ளது என்றார்சத்யராஜ்.கார்த்திக் சிதம்பரமும், கனிமொழியும் பேசுகையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆடைக் கட்டுப்பாட்டை கடுமையாகவிமர்சித்தனர். மாணவர்கள் மீது தனது முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் திணிக்கிறது. இதை எதிர்த்துப் போராட்டம் நடத்தமாணவர்கள் முயன்றால் அவர்களது இன்டர்னல் மதிப்பெண்களில் கை வைப்பார்கள் என்று மாணவர்கள் புலம்புகிறார்கள்என்றனர்.

    By Staff
    |

    கருத்து சுதந்திரத்தை வன்முறை மூலம் தடுக்க முயன்றால் காந்திக்கு நேர்ந்த கதைதான் நடக்கும் என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

    மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர்இணைந்து ஏற்படுத்தியுள்ள கருத்து அமைப்பின் முதல் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் நடிகர் சத்யராஜ், இந்தியன்எக்ஸ்பிரஸ் சென்னைப் பதிப்பு ஆசிரியர் சுசீலா ரவீந்திரநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இக் கூட்டத்தில் சத்யராஜ் பேசுகையில், கருத்து சுதந்திரத்தைத் தடுக்கக் கூடாது. கருத்து பரிமாற்றம், கருத்து சிந்தனைஆகியவையால் உலகம் வளருகிறது. கருத்து சுதந்திரம் மிக முக்கியமான விஷயம். காந்தி சொன்ன கருத்தை ஏற்க முடியாமல்கோட்சே அவரை சுட்டான். கருத்து சுதந்திரம் வன்முறையாக மாறினால் காந்தி கதையில்தான் முடியும்.

    கருத்தற்ற மனநிலை இருக்க வேண்டும். அப்போதுதான் பிறர் கூறும் கருத்துக்களை யோசிக்க முடியும், ரசிக்க முடியும்.

    குஷ்பு பற்றி பேச வேண்டியதாகியுள்ளது. அவரைப் பற்றிப் பேச என்ன அவசியம் வந்து விட்டது? கற்பு கற்பனையான விஷயம்.அது ஆண்களின் திருட்டுப் புத்தியால் வந்தது. அதைப் பேசுவதே மிகவும் சிரமமான விஷயம்.

    பெண்களும், மகளிர் அமைப்புகளும் இதைப் பற்றிப் பேசி விட்டுப் போகட்டும். ஆண்களுக்கு இதில் என்ன வேலை? அவர்கள்கற்புக்காக கொடி பிடிக்க வேண்டாம்.

    இதுக்கு மேல் நான் அதிகம் பேச முடியாது. அப்படிப் பேசினால் என்னையும் சிக்கலில் கொண்டு போய் விட்டு விடுவார்கள்.அப்புறம் ஒழுங்காக வீடு போய்ச் சேர முடியாது. நாங்கள் சூழ்நிலைக் கைதிகள். மூஞ்சியில் முட்டை வீசுவார்கள், காரில் குண்டுபோடுவார்கள்.

    என்னை நம்பி 10 பேர் படம் எடுக்கிறார்கள். அவர்களுக்கு சிரமம் ஏற்பட நான் காரணமாக இருக்கக் கூடாது. அதனால்கருத்துக்களை சுதந்திரமாகக் கூறக் கூடிய இந்த இடத்தில் கூட நான் எனது இஷ்டத்திற்குப் பேச முடியாத நிலை உள்ளது என்றார்சத்யராஜ்.

    கார்த்திக் சிதம்பரமும், கனிமொழியும் பேசுகையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆடைக் கட்டுப்பாட்டை கடுமையாகவிமர்சித்தனர். மாணவர்கள் மீது தனது முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் திணிக்கிறது. இதை எதிர்த்துப் போராட்டம் நடத்தமாணவர்கள் முயன்றால் அவர்களது இன்டர்னல் மதிப்பெண்களில் கை வைப்பார்கள் என்று மாணவர்கள் புலம்புகிறார்கள்என்றனர்.

      Read more about: satyaraj attacks pmk
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X