திரிஷாவை தவிர உங்களுக்கு வேறு யார் அண்ணா?..விஜய்யை வம்புக்கிழுத்த சத்யராஜ் மகள்..பஞ்சாயத்து ஸ்டார்ட்

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் போட்டியிடவில்லை, இன்று நடைபெற்றுவரும் ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலிலும் போட்டியிடவில்லை. அதேசமயம் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி களமிறங்குகிறது. இந்தச் சூழலில் சமீபத்தில் திமுகவில் இணைந்த நடிகர் சத்யராஜின் மகள் விஜய்யை பார்த்து சரமாரியாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் நடிகர் விஜய் அரசியலிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்த முடிவு செய்திருக்கிறார். அவர் அரசியலுக்கு வருவார் என்று சில வருடங்களாகவே ஆரூடங்கள் கூறப்பட்டன. சூழல் இப்படி இருக்க அண்மையில் அவர் அரசியல் கட்சியை தொடங்கினார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் அவர். கட்சி தொடங்கியதை அடுத்து கடந்த வருடம் விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். அதில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டார்கள்.

vijay trisha sathyaraj

திமுகதான் எதிரி: அந்த மாநாட்டில் பேசிய விஜய் அரசியலில் தங்களது கொள்கை எதிரி திமுகவும், பாஜகவும்தான் என்று சொன்னார். இருப்பினும் திமுகவைத்தான் அவர் தொடர்ந்து சாடிவருகிறார். பாஜகவை பட்டும் படாமல்தான் பேசுகிறார் என்ற விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்தவண்ணம் இருக்கின்றன. தங்களை விஜய் தொடர்ந்து விமர்சிப்பதால் திமுகவினரும் தங்கள் பங்குக்கு கோதாவில் குதித்து விஜய்யை சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்துவருகிறார்கள்.

என்ன விமர்சனம்: அதாவது ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னுடைய பனையூர் அலுவலகத்துக்கு வரவழைத்து நிவாரண உதவிகளை வழங்கினார் விஜய். அதை கையிலெடுத்த திமுகவினர், விஜய் Work From Home அரசியல் செய்கிறார் என்று கிண்டல் செய்தனர். மேலும் பாஜகவின் பி டீம்தான் தமிழக வெற்றிக் கழகம் என்றும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துவருகிறார்கள். அதற்கு விஜய்யும் தகுந்த பதிலடி கொடுக்கிறார். பரந்தூரில்கூட திமுகவை மறைமுகமாக சாட மறக்கவில்லை விஜய்.

திரிஷா, விஜய் பற்றி கிசுகிசு: இதற்கிடையே விஜய்யையும், திரிஷாவையும் இணைத்து லியோ படத்திலிருந்தே கிசுகிசுக்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. இரண்டு பேரும் தனி விமானத்தில் சென்றது, லிஃப்ட்டில் இரண்டு பேரும் இருந்த ஃபோட்டோ, ஒரே அப்பார்ட்மெண்ட்டில்தான் இருக்கிறார்கள் என்று பலரும் பலவாறு பேசுகிறார்கள். அதுமட்டுமின்றி விஜய்யும், திரிஷாவும் நெருக்கமாக இருப்பதால்தான் விஜய்யின் மனைவி சங்கீதா கோபித்துக்கொண்டு லண்டன் கிளம்பிவிட்டார் என்றும் பேச்சுக்கள் எழுந்தன.

அதெல்லாம் பொய்: ஆனால் அதை திட்டவட்டமாக மறுக்கிறார்கள் விஜய்யின் ஆதரவாளர்கள். விஜய்யின் அரசியல் களத்தை சிதைப்பதற்காகத்தான் அவர் மீது பெண் பித்தர் என்ற பிம்பத்தை கட்டமைக்கிறார்கள். அதையெல்லாம் விஜய் தவிடு பொடியாக்கிவிடுவார் என்று தவெக தொண்டர்கள் உறுதியோடு கூறுகிறார்கள். இந்தச் சூழலில் சமீபத்தில் திமுகவில் இணைந்த நடிகர் சத்யராஜின் மகள் விஜய்க்கு சரமாரியாக கேள்விகளை முன்வைத்திருக்கிறார். அது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சத்யராஜின் மகள் பேட்டி: தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "விஜய் இன்னமும் மக்கள் பணி செய்யவே ஆரம்பிக்கவில்லை. அவரது கட்சி 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவிதமான போட்டியையும் திமுகவுக்கு கொடுக்காது. ஒரு சினிமா துறையை சேர்ந்தவளாக இப்போது பேசுகிறேன். விஜய் இதுவரை தனது படங்களில் எந்தத் தமிழ் நடிகையை நடிக்க வைத்திருக்கிறார். ப்ரியா பவானி சங்கர், திவ்யா துரைசாமி, வாணி போஜன் போன்ற தமிழ் நடிகைகள் மிகச்சிறப்பாக நடிக்கிறார்கள். அவர்களை தன்னுடைய படங்களில் நடிக்க வைக்கலாமே. அதை விட்டுவிட்டு விஜய் அண்ணா எப்போதும் தன்னுடைய படங்களில் வட மாநில ஹீரோயின்களைத்தான் நடிக்க வைப்பார். விஜய் அண்ணா உங்களுக்கு ஜோடியாக நடித்த தமிழ் நடிகைகளில் திரிஷாவை தவிர வேறு யார் அண்ணா?" என்று கேள்வி எழுப்பினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X