twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    41 வருஷத்துல நான் 'இப்படி' நடிச்சதே இல்லை, இது தான் முதல் முறை: சத்யராஜ்

    By Siva
    |

    Recommended Video

    41 வருஷத்துல நான் 'இப்படி' நடிச்சதே இல்லை : சத்யராஜ் வைரல் வீடியோ

    சென்னை: 41 வருடத்தில் இப்படி நான் நடித்ததே இல்லை என்று சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

    ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் நோட்டா. இந்த படம் மூலம் தெலுங்கு நடிகரான விஜய் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்.

    இந்நிலையில் நோட்டா படக்குழு செய்தியாளர்களை சந்தித்து பேசியது. அப்போது சத்யராஜ் பேசியதாவது,

    பொய்

    பொய்

    மைக்கை வெள்ளைக்காரன் கண்டுபிடித்ததே பொய் பேசத் தான். அப்படி இருக்கும்போது இதற்கு முன்னால் எப்படி உண்மையை பேசுவது. ஒரு மைக்கை கண்டுபிடித்து இதற்கு முன்பு பொய் பேசினால் இது வெடித்துச் சிதறி இங்குள்ளவர்கள் அனைவரும் இறந்துவிடுவார்கள் என்று கூறினால் ஒரு மீட்டிங் நடக்காது. மைக் முன்பு ஒருத்தன் வர மாட்டான்.

    அரசியல்

    அரசியல்

    நோட்டா படம் ஒரு அரசியல் த்ரில்லர் என்று சொல்லலாம். இந்த படத்தில் அதிகம் பாராட்ட வேண்டியது என்றால் அது விஜய் தேவரகொண்டாவை தான். நானும் மலையாளம், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்திருக்கிறேன் ஆனாலும் பிற மொழிகளில் பேசுவது ரொம்ப கஷ்டம். நண்பன் படத்தில் நடித்தபோது தெலுங்கு டப்பிங் நீங்களே பேசுங்க என்று ஷங்கர் சார் சொன்னார்.

    தெலுங்கு

    தெலுங்கு

    டப்பிங் தியேட்டருக்கு சென்றால் பெரிய வசனத்தை கொடுத்தார்கள். நானும் ஒரே டேக்கில் பேசி முடித்துவிட்டு கிளம்பினேன். அப்போது அங்கு வந்த தெலுங்கு ரைட்டர் சார் நீங்கள் பேசியது தெலுங்கே இல்லை என்றார். 10 டேக் பேசியும் சரி வரவில்லை. நோட்டா படத்தில் ஹீரோவுக்கு 4 பக்கத்திற்கு வசனம். தமிழ் தெரியாமல் விஜய் எப்படி பேசுவார் என்று நினைத்தால் அருமையாக பேசிவிட்டார்.

    முதல் படம்

    முதல் படம்

    நான் இந்த படத்தில் ரொம்ப ஜாலியாக ரசித்து நடித்ததாக நாசர் சார் கூறினார். இந்த 41 வருஷத்தில் சின்ன மேக்கப் கூட இல்லாமல் நடித்த முதல் படம் இது தான். விக் இல்லாமல் நடித்திருக்கிறேன். மணிரத்னம் சாரின் முதல் படமான பகல் நிலவில் விக் வைத்திருக்க மாட்டேன். கல் தோன்றி மண் தோன்றா காலத்திலேயே நமக்கு மண்டை மேலேயும், உள்ளேயும் ஒன்றும் இல்லை. வயதானவராக தெரிய வேண்டும் என்று செயற்கையான புருவம், மீசை ஒட்டினார்கள்.

    புழுதி

    புழுதி

    பாகுபலி படத்தில் நடித்தபோது எல்லாம் புழுதியை எடுத்து வந்து முகத்தில் போட்டார்கள். பாகுபலி செட்டுக்கு வந்தாலே ஞானியே வணக்கம் என்று கூறி நாசர் சார் என்னை கிண்டல் செய்வார். நோட்டா படத்தில் தான் முதல் முறையாக விக் இல்லை, மீசை இல்லை, எந்த மேக்கப்பும் இல்லை. அதனால் இந்த படத்தை விட்டால் சான்ஸ் கிடைக்காது என்பதால் அனைத்து காட்சிகளிலும் முகத்தை தேய்த்துக் கொண்டே நடித்தேன்.

    சென்டிமென்ட்

    சென்டிமென்ட்

    இந்த படம் ஹிட்டாகிவிட்டால் சத்யராஜ் மேக்கப் போடாவிட்டால் ஹிட்டாகும் என்ற சென்டிமென்ட் வந்துவிடும். நான் மிகவும் திருப்தியாக நடித்த படம். இந்த படத்தில் அழகான விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும். வாழ்த்துக்கள் என்று கூறினார் சத்யராஜ்.

    English summary
    Sathyaraj has said that he has acted without makeup for the first time in his career for Vijay Deverakonda's Nota.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X