உங்கள் ஆன்மாவை திருப்திப்படுத்துங்கள் போதும்.. அவர்களை வேண்டாம்.. அதிரடி காட்டும் ஆடை பட நாயகி!
சென்னை: உங்கள் ஆன்மாவை மட்டும் திருப்திப்படுத்துங்கள், சமூகத்தை எல்லாம் திருப்திப்படுத்த தேவையில்லை என நடிகை அமலா பால் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். விஜய், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டார்.
ஆனால் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்தப் பிறகு அப்படியே அவரது மார்க்கெட் சரிய தொடங்கியது. அதன் பிறகு அவர் நடித்த அதோ அந்த பறவை போல படத்தை கூட ரிலீஸ் முன்வரவில்லை என கூறப்படுகிறது.

இரண்டாவது திருமணம்
ஏற்கனவே இயக்குநர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட அவர் இயக்குநர் விஜயை விவாகரத்து செய்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமலா பால் தனது நீண்ட நாள் காதலரான பாவ்னீந்தர் சிங்கை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்.

போட்டோக்கள் வெளியாகவில்லை
அவர்களின் கல்யாண போட்டோக்கள் வைரலானது. ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த போட்டோக்கள் அவரது கணவரின் இன்ஸ்டா பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. அதன்பிறகு இருவரும் சேர்ந்து இருப்பது போன்ற போட்டோக்கள் எதுவும் வெளியாகவில்லை.

விரக்தியின் வெளிப்பாடு
இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் அமலா பால் அவ்வப்போது தத்துவங்களையும் போட்டோக்களையும் பகிர்ந்து வருகிறார். பெரும்பாலும் அவர் ஷேர் செய்யும் போட்டோக்களும் அவரது கருத்துக்களும் விரக்தியின் வெளிப்பாடாகவே இருந்து வருகிறது.

இலையால் ஆன கிரீடம்
கேரளாவில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் கூட மிக காட்டமான பதிவை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இலைகளால் செய்யப்பட்ட ஒரு கிரீடத்தை அணிந்த போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் அமலா பால்.

ஆன்மாவை திருப்திப்படுத்துங்கள்
கன்னத்தில் கை வைத்தப்படி முகத்தில் சிரிப்பின்றி உள்ள அமலா பால், அந்த போட்டோவுடன் உங்களின் ஆன்மாவை திருப்திப்படுத்துங்கள் போதும், சமூகத்தை திருப்திப்படுத்த தேவையில்லை என தனது கருத்து தெரிவித்துள்ளார். அமலா பால் யாருக்காக இந்த கருத்தை கூறினார் என்று தெரியவில்லை.

சமூகம் செய்யவில்லையா
ஆனாலும் நெட்டிசன்கள் அவருக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். சிலர் இந்த சமூகம் உங்களை திருப்திப்படுத்தவில்லையா என பதிலுக்கு கேள்வி கேட்டுள்ளனர். சிலர் கிருஷ்ணா போன்று இருக்கிறீர்கள் என்றும் க்யூட்டாக உள்ளீர்கள் என்றும் கமென்ட் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











