கதாநாயகனாக களமிறங்கும் பிரபல காமெடியன்... தயாரிக்கப் போவது யார் தெரியுமா?
சென்னை : சந்தானம், வடிவேலு, யோகி பாபு, சூரி ஆகியோரைத் தொடர்ந்து இப்போது பிரபல காமெடி நடிகர் சதீஷ் கதாநாயகனாக களம் இறங்குகிறார்.
சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ், விஜய் சேதுபதி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் தனது தனித்துவமான காமெடியின் மூலம் அனைவரையும் ரசிக்க வைத்தவர்.
இதுவரை குணச்சித்திர வேடங்களிலும் காமெடியனாகவும் நடித்து வந்தவருக்கு தற்பொழுது ஹீரோ ஆசை வந்துவிட அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் அதை பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

மேடை நாடகங்கள்
தற்போதுள்ள தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சதீஷ், ஜித்தன் ரமேஷ் நடித்த ஜெர்ரி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். பல்வேறு மேடை நாடகங்கள் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் தற்போது சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியனாக உள்ளார்.

திருப்புமுனையை ஏற்படுத்தி
நடிகர் சிவகார்த்திகேயன் உடன் தொடர்ந்து பல படங்களில் பணியாற்றி உள்ள இவர்கள் இணைந்தாலே அந்த படம் சூப்பர் ஹிட் என்று சொல்லும் அளவிற்கு மாறிப்போக முதல்முறையாக எதிர்நீச்சல் படத்தில் இந்தக் கூட்டணி உருவானது. எதிர்நீச்சல் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமல்லாமல் சதீஷ்க்கும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி பலருக்கும் இவரை அறிமுகப்படுத்தியது.

ஹீரோவாக நடிக்கும் ஆசை
இவரை எண்ணற்ற திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனித்துவமான கவுண்ட்டர்கள் மூலம் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்த சதீஷ்க்கு இப்பொழுது ஹீரோவாக நடிக்கும் ஆசையும் வந்துவிட்டது. ஏற்கனவே வடிவேலு, சந்தானம்,யோகி பாபு,சூரி என பலரும் காமெடி நடிகர்களாக இருந்து இப்பொழுது ஹீரோக்களாக பல படங்களில் நடித்திருக்க அந்த வரிசையில் நடிகர் சதீஷும் தற்பொழுது இணைந்துள்ளார்.

ஏஜிஎஸ் நிறுவனம்
பல சூப்பர்ஹிட் படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் சதீஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மற்றுமொரு படத்திலும் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் அதுவும் ஹீரோவாக சதீஷ் நடிக்கவிருக்கும் விஷயத்தை அறிந்த ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்து போக
விரைவில் இதைப்பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











