ரஜினி- சோனாக்ஷி ஜோடி... சத்ருகன் சின்ஹா மகிழ்ச்சி.. 'சினிமாவில் இது சகஜம்!'

By Shankar

மும்பை: இளம் நாயகிகளுடன் சீனியர் நடிகைகள் நடிப்பது ஒரு பெரிய விஷயமில்லை. சினிமாவில் இது சகஜம், என சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார் பாலிவுட்டின் முன்னணி நடிகை சோனாக்ஷி சின்ஹா.

கமலுக்கு நோ சொன்னவர்

கமலுக்கு நோ சொன்னவர்

இது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. காரணம், இதற்கு முன்பு கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்தில் முதலில் ஒப்பந்தமானவர் சோனாக்ஷி சின்ஹாதான். ஆனால் கடைசி நேரத்தில் கால்ஷீட்டை காரணம் காட்டி விலகிக் கொண்டார்.

ரஜினிக்கு தாராள கால்ஷீட்

ரஜினிக்கு தாராள கால்ஷீட்

இப்போது ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக அறிந்தவுடனே, தாராளமாகக் கால்ஷீட்டை வழங்கியிருப்பதுடன், ரஜினியுடன் நடிப்பதன் மூலம் தன் தென்னிந்திய திரையுலகப் பயணத்தைத் தொடர்வது மகிழ்ச்சியாக உள்ளதென குறிப்பிட்டுள்ளார்.

குழந்தையாக ஓடித் திரிந்தவர்

குழந்தையாக ஓடித் திரிந்தவர்

ரஜினியின் நெருங்கிய நண்பர் சத்ருகன் சின்ஹாவின் மகள்தான் இந்த சோனாக்ஷி. ரஜினியும் சத்ருகனும் அஸ்லி நக்லியில் இணைந்து நடித்த போது சோனாக்ஷி ஒரு குழந்தையாக அந்த செட்டில் ஓடித் திரிந்தவர்.

இப்போது வளர்ந்து முன்னணி நடிகையாகி ரஜினிக்கே ஜோடியாக சோனாக்ஷி நடிப்பது குறித்து தந்தை சத்ருகன் என்ன சொல்கிறார்?

இதெல்லாம் சகஜமப்பா..

இதெல்லாம் சகஜமப்பா..

சோனாக்ஷிக்கு ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மிக விருப்பம். யாருக்குதான் அந்த விருப்பம் இருக்காது. இந்தியாவின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் அவர். பல கோடி ரசிகர்கள். ரஜினி சார் தன்னைவிட மிக இளவயது நடிகைகளுடன் நடிப்பது ஒன்றும் புதிதில்லையே..

கரீனா நடிக்கலையா...

கரீனா நடிக்கலையா...

மும்பை திரைத் துறையில் மூத்த நடிகர்களுடன் இளம் நடிகைகள் நடிப்பது சர்வசாதாரணம். கரிஷ்மா கபூரும் அக்ஷயும் நடித்துக் கொண்டிருந்த செட்டில் குழந்தையாக ஓடித் திரிந்த கரீனா கபூர், பின்னர் அக்ஷய்க்கு ஜோடியாக நடிக்கவில்லையா? சீனியரான அமிதாப்புக்கு ஜோடியாக 16 வயதே நிரம்பிய ஜியா கான் நடிக்கவில்லையா?

கதையில் மாறுதல்கள்

கதையில் மாறுதல்கள்

தன்னை விட வயதில் இரு மடங்கு மூத்த சல்மான் கான், அக்ஷய் குமார் மற்றும் அஜய் தேவ்கனுடன் இதற்கு முன்பு நடித்தவர்தான் சோனாக்ஷி. சோனாக்ஷிக்கு இப்போது 27 வயதாகிறது. ரஜினி படத்தில் அவர் பாத்திரத்துக்கேற்ப கதையில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன," என்று குறிப்பிட்டுள்ளார்.

பெருமைதான்

பெருமைதான்

மேலும் ரஜினியுடன் தன் மகள் நடிப்பது தனக்குப் பெருமையான விஷயமே என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன் ரஜினியுடன் சிறு குழந்தையாக நடித்த மீனா, பின்னர் அவருக்கு ஜோடியாக எஜமான், வீரா, முத்து போன்ற படங்களில் நடித்தது நினைவிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X