twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சத்யராஜ் பேச்சுக்கும் பாகுபலிக்கும் தொடர்பு இல்லை: ராஜமவுலி சரண்டர்

    By Siva
    |

    பெங்களூர்: சத்யராஜ் கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து அதற்காக பாகுபலி 2 படம் பாதிக்கப்படக் கூடாது என்று இயக்குனர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

    காவிரி பிரச்சனையின்போது கன்னடர்களுக்கு எதிராக பேசிய நடிகர் சத்யராஜ் மன்னிப்பு கேட்காத வரை பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் வெளியாக விட மாட்டோம் என கன்னட அமைப்புகள் தெரிவித்துள்ளன.

    ராணுவமே வந்தாலும் படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று கன்னட ஆர்வலர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாகுபலி 2 இயக்குனர் ராஜமவுலி கன்னடத்தில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

    சத்யராஜ்

    சத்யராஜ்

    சத்யராஜ் பாகுபலி படத்தின் இயக்குனரோ, தயாரிப்பாளரோ அல்ல. அவர் அந்த படத்தில் நடித்துள்ளார். படம் ரிலீஸாகாவிட்டால் அவருக்கு எந்தவித நஷ்டமும் இல்லை.

    பாகுபலி

    பாகுபலி

    பாகுபலி பட வெளியீட்டை தடுத்தால் அதனால் பாதிக்கப்படும் நூற்றுக்கணக்கானவர்களின் நிலையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். சத்யராஜின் தனிப்பட்ட கருத்திற்காக படத்தை எதிர்ப்பது சரி அல்ல.

    சொல்லியாச்சு

    சொல்லியாச்சு

    இது குறித்து சத்யராஜிடம் நாங்கள் ஏற்கனவே தெரிவித்துவிட்டோம். ஆனால் இதற்கு மேல் வேறு எதுவும் செய்ய முடியாது. படத்திற்கும், சத்யராஜின் தனிப்பட்ட கருத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

    வேண்டாம்

    வேண்டாம்


    ஒருவர் பேசிய பேச்சிற்காக அத்துடன் படத்தை தொடர்படுத்த வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். உங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார் ராஜமவுலி.

    English summary
    A day after pro-Kannada organisations called for a statewide bandh demanding a ban on Baahubali 2, the film's director S S Rajamouli made an appeal. In a video message in Kannada, Rajamouli said that Satyaraj's comments were personal and the film should not suffer for the same.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X