Pushpa 2: கத்தரித்து வீசப்பட்ட புஷ்பா 2வில் இருந்த அந்தக் காட்சிகள்.. ஆரம்பமே அமர்க்களமா இருக்கே..
சவுதி அரேபியா: திரைப்படங்கள் என்பது பொதுவாகவே பொழுதுபோக்காக பார்க்கப்பட்டாலும், அவை இன்றைக்கும் சமூகத்தில் சலசலப்பை, கேள்வியை, மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய கருவியாக இன்றைக்கும் உள்ளது. இதுமட்டும் இல்லாமல் ஒருசில நாடுகளில் சினிமாக்களில் சில வகைப்படுத்தப்பட்ட காட்சிகளுக்கு அனுமதி இல்லை. அப்படி இன்றைக்கு உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள புஷ்பா 2 படத்தில் இருந்து 19 நிமிடங்களுக்கான காட்சிகளை சவுதி அரேபியா சென்சார் போர்ட் நீக்கியுள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா, ஃபகத் ஃபசில் என பெரும் நட்சதிரப்பட்டாளம் நடித்துள்ள படம் புஷ்பா 2. படம் இன்று அதாவது டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்தினை உலகம் முழுவதும் சுமார் 12,500 தியேட்டர்களில் படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. படத்தினை தயாரித்த மைத்ரீ மூவீஸ் நிறுவனம் சுமார், 500 கோடிகளுக்கும் மேலான அளவில் பணத்தினை செலவு செய்து புஷ்பா 2 படத்தை தயாரித்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படம் பான் இந்தியா அளவில் பெரிய ஹிட் படமாக மாறியது. படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது. அதேபோல் படத்தின் இடம் பெற்ற பாடலான, ஸ்ரீவள்ளி பாடலுக்கும் தேசிய விருது அளிக்கப்பட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் புஷ்பா பெரும் வெற்றிப் படமாக மாறியது.

சென்சார்: புஷ்பா 2 படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுக்கு மட்டும் ரூபாய் 300 கோடிகள் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. படப்பிடிப்புக்கு மத்தியில் இயக்குநர் சுகுமாறனுக்கும், அல்லு அர்ஜுனுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது. படம் மொத்தம் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடுகின்றது. இந்த ரன்னிங் டைம் என்பது இந்தியாவிலும் மற்ற சில நாடுகளிலும்தான். ஆனால் படத்தினை சென்சார் செய்த சவுதி அரேபியா சென்சார்போர்டு, படத்தில் இருந்து 19 நிமிடக் காட்சிகளை நீக்க உத்தரவிட்டுள்ளது.

ஆபாச காட்சிகள்: சவுதி அரேபியாவின் சென்சார் போர்ட் சொன்ன கருத்தைக் கேட்டுக் கொண்ட புஷ்பா 2 படக்குழு, அதாவது படத்தை அங்கு வெளியிடும் விநியோகஸ்தர், மறுப்போ அல்லது பதில் எதுவும் பேசாமல், ஓ.கே சொல்லிவிட்டாராம். சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் உருவாகும் அல்லது வெளியிடப்படும் படங்களுக்கென அவர்கள் தனிச்சட்டம் வகுத்து வைத்துள்ளனர். அதில் மிகவும் குறிப்பாக, ஆபாசமான காட்சிகள், படுக்கையறைக் காட்சிகள், போதைப்பொருள் பயன்படுத்தும் காட்சிகளுக்கு ஒரு நொடிகூட அனுமதி இல்லை.

19 நிமிடம் கட்: இப்படியான நிலையில், புஷ்பா 2 படத்தில் மிகவும் ஆபாசமான காட்சிகளும் அதிலும் கிஸ்க் பாடலில் ஸ்ரீலீலா மிகவும் கவர்ச்சியான நடனத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது போன்ற காட்சிகளும், ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுன் இடையிலான நெருக்கமான காட்சிகளும், அல்லு அர்ஜுன் புடவை கட்டிக்கொண்டு வரும் காட்சிகளும் இவை இல்லாமல், சில காட்சிகளும் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 மணி நேரம் 20 நிமிட படம், சவுதி அரேபியாவில் 3 மணி நேரம் 1 நிமிடம் மட்டுமே திரையிடப்படுகின்றது. இந்தத் தகவல், சவுதி அரேபியாவில் இருக்கும் அல்லு அர்ஜுன் ரசிகர்களை கொஞ்சம் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.



Click it and Unblock the Notifications











