‘சாவடி‘பர்ஸ்ட் லுக் போஸ்டர்...பொங்கலுக்கு ரிலீஸ்
சென்னை : பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் சாவடி என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாறுகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பொங்கலுக்கு வெளியிடுகிறார்.
நடிகர்கள் ஆடும் நடனத்திற்கு என்று ஒரு தனி ரசனை உண்டு. அதிலும் அவர்கள் ஆடும் போது திரையரங்கில் அனைவரும் சேர்ந்து ஆடுவார்கள். பெரிய நடிகர்கள் முதல் சிறிய நடிகர்கள் வரை திரையில் சிறப்பாக நடனம் ஆடி அனைவரின் கைத்தட்டும் பெற்று ஜொலிக்க முக்கிய காரணம் யார் என்றால் நடன இயக்குனர்கள் தான்.

பெரிய ஹீரோக்களின் படம் வெளியானதும் முதல் நாள், முதல் காட்சி முதல், கடைசி நாள் கடைசி காட்சி வரை நம்மை ஆட்டம் போட வைக்கிறது இவர்களின் நடனம் தான். அப்படி பட்ட ஹீரோக்களுக்கு நடனங்களை கற்று கொடுப்பவர்கள் பலர் அதில் ஒருவர் தான் ஸ்ரீதர் மாஸ்டர்.
கே. பாலச்சந்தரின் பொய் என்ற படத்தின் மூலம் தனது முதல் முழு நடிப்பை வெளிப்படுத்தினார் ஸ்ரீதர் மாஸ்டர். இப்படத்தில் துணை நடிகர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதற்கு முன் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் பல படங்களில் பின்னால் ஆடும் நடன கலைஞர்களில் ஒருவராக இருந்து பின் நடன இயக்குனராகவே மாறினார் ஸ்ரீதர் மாஸ்டர்.

இவர் நடனம் அமைத்த காதலில் விழுந்தேன் படத்தின் நாக்கு முக்கா பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவியது. அப்பாடலில் வரும் நடனத்தை ஆடாத குழந்தைகளே இல்லை. இந்த அளவுக்கு அந்த படத்தின் நடன அசைவு சூப்பராக இருக்கும். இவர் நடிகர் விஜய்க்கு, போக்கிரி, வில்லி, புலி, துப்பாக்கி, தலைவா போன்ற அவரின் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

நடன இயக்குனராக இருந்த மாஸ்டர் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்க உள்ள படத்தின் தலைப்பு 'சாவடி' இக்கதை இரு சக்கர வாகனங்களை வைத்து ரேஸ் விடுபவர்கள் மற்றும் அதிக வேகத்தில் வண்டியை ஓட்டுபவர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் சாகசம் செய்பவர்கள் பற்றிய கதை.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பொங்கல் அன்று வெளியாக உள்ளது. மேலும் இந்த போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் இரு சக்கர வாகனங்களை வைத்து ரேஸ், சாகசம் போன்றவற்றை செய்யும் ஆட்களுக்கு ஒரு நல்ல கருத்தை சொல்லும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











