Don't Miss!
- News
"தமிழுக்கு வெறும் ரூ.23 கோடி.. ஆனால் சமஸ்கிருதத்திற்கு மட்டும் ரூ.643 கோடி" உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
- Sports
மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
- Finance
கூகுள் ஊழியர்கள் சம்பளம் கட்.. சுந்தர் பிச்சை அடுத்த அதிரடி..!
- Lifestyle
உங்க முகம் எப்பவும் டல்லா இருக்கா? அப்ப பளபளப்பா ஜொலிக்க பீட்ருட்டை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்!
- Automobiles
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
ரேஸ் ..ரேஸ் ..பைக் ரேஸ்.. ‘சாவடி‘பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
சென்னை : ஶ்ரீதர் மாஸ்டரின் சாவடி படத்தின் முதல் பார்வை போஸ்டரை விஜய் சேதுபதி இன்று வெளியிட்டார்.
ஶ்ரீதர் மாஸ்டர் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடன இயக்குனர்களில் ஒருவர் தற்போது அவர் நடித்து இயக்கி இருக்கும் படம் தான் சாவடி .

இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டார். அந்த நிகழ்வு வித்தியாசமான முறையில் நடைப்பெற்றது. அது என்னவென்றால் ஶ்ரீதர் மாஸ்டர் படத்தின் முதல் பார்வை போஸ்டரை ஒரு தலை கவசத்தின் மேல் அச்சடித்து இருந்தார். அதன் மேல் இருந்த ரிப்பனை அவிழ்த்து படத்தின் போஸ்டரை வெளியிட்டார் விஜய் சேதுபதி .
அதற்கு பிறகு அந்த தலை கவசத்தை ஶ்ரீதருக்கு அணிவித்தும் விட்டார் விஜய் சேதுபதி . மகிழ்ச்சியில் விஜய் சேதுபதி ஶ்ரீதர் மாஸ்டரை கட்டி தழுவி தனது வாழ்த்தை தெரிவித்து கொண்டார்

இந்த சாவடி படத்தின் முதல் பார்வை போஸ்டரை பார்க்கும் போது பைக் ரேஸ் அதிகம் செல்லும் நண்பர் கூட்டத்தின் கதை என்பது போல தெரிகிறது .படத்தின் கதாநாயகனாவும் இயக்குனராகவும் ஶ்ரீதர் மாஸ்டர் களம் இறங்கி இருக்கிறார். படத்தை லிப்பி சினி கிராப்ட்ஸ் விஎன்.ரஞ்சித்குமார் தயாரித்து இருக்கிறார். படத்தின் நாயகியாக இஸ்பேட் ராஜவும் இதயராணியும் புகழ் சில்பா மஞ்சுநாத் நடித்து இருக்கிறார் .
இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டரை விஜய் சேதுபதி மாஸ்டர் படசெட்டில் இருந்து கொண்டு தனது கேரவனின் உள்ளே ஶ்ரீதருடன் வெளியிட்டார் .விஜய் சேதுபதியின் காஸ்டியூம் மற்றும் கெட்டப்பை பார்க்கும் போது அது மிக தெளிவாக தெரிந்தது .

விஜய் சேதுபதி பேட்ட படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார் அதே போல இந்த படத்திலும் வில்லனா அல்லது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பது இனிமேல் தான் தெரியும் .
சாவடி படத்தின் மூலமாக நடன இயக்குனரில் இருந்து இயக்குனராக உயர்கிறார் ஶ்ரீதர் மாஸ்டர். இவருக்கு இதற்காக சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது .ரேஸ் படம் தலை கவசத்தில் முதல் பார்வை முக்கியமான கருத்துடன் படம் உருவாகி வருவது இதன் மூலம் தெரிகிறது பொறுத்திருந்து பார்ப்போம்.