நட்பையும், காமெடியையும் வைத்து ஒரு 'பயங்கரமான' படம்... 2 ஹீரோயின்கள்!

By Sudha

சென்னை: நட்பையும், காமெடியையும் வைத்து ஒரு பரபரப்பான திரில் படம் உருவாகியுள்ளது. இதில் இரண்டு ஹீரோயின்கள், 3 நாயகர்கள்.

அன்னை தெரசா பிலிம்ஸ் நிறுவனம்தான் இந்த சவரிக்காடு படத்தை தயாரித்துள்ளது.

இப்படம் ஒரு திகில் படமாகும் என்று கூறும் இயக்குநர் எம்.என்.கிருஷ்ணகுமார், அதேசமயம், நட்பையும், காமெடியையும் வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கியிருப்பதாக கூறுகிறார்.

3 நாயகர்கள்

3 நாயகர்கள்

படத்தில் 3 பேர் நாயகர்களாக நடிக்கிறார்கள். அதாவது ரவீந்திரன், ராஜபாண்டி, கிருஷ்ணகுமார் ஆகியோர்தான் அந்த நாயகர்கள்.

2 நாயகிகள்

2 நாயகிகள்

படத்தில் இரண்டு பேர் நாயகிகளாக நடிக்கிறார்கள். சுவாதி ஒரு நாயகி. இன்னொருவர் பெயர் ரேணு.

முக்கிய வேடத்தில் சூரி

முக்கிய வேடத்தில் சூரி

காமெடியன் பரோட்டா சூரி முக்கியப் பங்காற்றியுள்ளாராம். இவர் போக ரோபோ சங்கர், அல்வா வாசு உள்ளிட்டோரும் படத்தில் கலக்குகிறார்களாம்.

மிரட்டல் அதிகாரி சண்முகராஜன்

மிரட்டல் அதிகாரி சண்முகராஜன்

சண்முகராஜன் வன அதிகாரியாக திகிலூட்டும் விதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

திகிலும் இருக்கும், பயமும் இருக்கும்

திகிலும் இருக்கும், பயமும் இருக்கும்

காடுகளுக்குள் மனதைக் கவரும் பசுமையும் இருக்கும் திகிலூட்டும், பயம் கொள்ள வைக்கும் விஷயங்களும் இருக்கும். இந்த சவரிக்காட்டில் இது இரண்டையும் கருவாக வைத்துக் கொண்டு நட்பையும், காமெடியையும் சேர்த்து பரபரப்பான படமாக்கி உள்ளேன் என்று கூறியுள்ளார் இயக்குநர்.

படத்தின் ஸ்டில்களைப் பார்த்தால் கவர்ச்சியும் பயங்கரமாக இருக்கும் போலிருக்கே....!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X