வசூல்ராஜா நடிகரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை.. மோசடி செயலியுடன் தொடர்பு

கொச்சி: ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில் மலையாள நடிகர் ஜெயசூர்யாவின் ரூபாய் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. ஏற்கனவே, 'சேவ் பாக்ஸ்' என்ற செயலி மீதான வழக்கு விசாரணை கடந்த 2023ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தாலும், அவரது சொத்துக்களில் ரூபாய் 39 லட்சம் சொத்துக்களை முடக்கி உள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டில் இருந்து வழக்கு விசாரணையில் இருந்தாலும் சேவ் பாக்ஸ் செயலி நிறுவனத்துடன் அவருக்கு நடைபெற்ற பணப் பரிவர்த்தனை ஆகிவற்றை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் அவரது செத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. சேவ் பாக்ஸ் செயலி மோசடி என்பது, இந்த செயலி மக்களிடம் இருந்து பெருமளவு பணத்தை பெற்று, அதில் அவர்களுக்கு லாபத்தில் பங்கு மற்றும் அதிக ரிட்டன்ஸ் கொடுப்பதாக கூறி ஏமாற்றி உள்ளனர். இது திட்டமிடப்பட்ட மோசடி வேலை என்று புகார்கள் வந்ததை அடுத்து காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த செயலியின் நிறுவனர் சுவாத்திக் ரஹீம் மீது பல புகார்கள் எழுந்ததை அடுத்து, திருச்சூர் கிழக்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

Save Box Fraud Case Enforcement Directorate Attaches 39 Lakh Assets of Actor Jayasurya

விளம்பர ஒப்பந்தம்: இதில் நடிகர் ஜெயசூர்யா சம்பந்தப்பட்ட இடம் என்றால் அது, அந்த செயலியின் விளம்பரத்திற்காக அவர் நடித்தது தான். இந்த விளம்பரத்திற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து நடிகர் ஜெயசூர்யாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. விசாரணையின் ஆரம்ப காலத்தில், சேவ் பாக்ஸ் உடனான நிதி கொடுக்கல் வாங்கல்கள் குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்க அவருக்கு அவகாசமும் வழங்கப்பட்டது.

மத்திய அரசு போட்ட உத்தரவு: இதில் இந்த வழக்கை மேலும் பரபரப்பாக மாற்றிய விஷயம் என்றால், அது மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு தான். அதாவது இதுபோன்ற மோசடி விளம்பரங்கள் பணம் செலுத்தி விளம்பரம் செய்பவர்களின் பங்கையும் விசாரிக்க வேண்டும் என்றும், இது போன்ற திட்டமிட்ட மோசடி பிரச்சாரங்களில் பங்கேற்றோர் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தது. இதன் பின்னர் நடிகர் ஜெயசூர்யா மீதான விசாரணையும் அதிகரித்தது. அதன் அடிப்படையில் தான் நடிகர் ஜெய சூர்யாவின் சொத்துக்களில் ரூபாய் 39 லட்சத்தை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. நடிகர் ஜெயசூர்யா தமிழில் வசூல் ராஜா போன்ற வெகு சில படங்களில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X