விஜயின் ஒரு பேச்சு.. களமிறங்கிய மாஸ் ரசிகர்கள்.. நியூட்ரினோவுக்கு எதிராக தேசிய அளவில் டிரெண்ட்!

தேனியை உலுக்கும் நியூட்டிரினோ பிரச்சனை குறித்து விஜய் ரசிகர்கள் பேச தொடங்கி உள்ளனர்.

Recommended Video

Vijay Speech at Bigil Audio Launch : விஜய் பேசிய அந்த ஒரு விஷயம்-வீடியோ

சென்னை: தேனியை உலுக்கும் நியூட்டிரினோ பிரச்சனை குறித்து விஜய் ரசிகர்கள் பேச தொடங்கி உள்ளனர். இதற்காக விஜய் ரசிகர்கள் #SaveTheniFromNEUTRINO என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் சென்னையில் பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் அரசியல் குறித்தும் சமுதாய பிரச்சனை குறித்தும் பேசினார்.

முக்கிய சமூக பிரச்சனை பலவற்றை குறித்து அவர் முக்கிய கருத்துக்களை சொன்னார். அவர் சொன்ன கருத்துக்களை தற்போது அவரின் ரசிகர்கள் பின்பற்ற தொடங்கி உள்ளனர்.

சமுதாயம்

சமுதாயம்

நடிகர் விஜய் தனது பேச்சில், பேனர் விழுந்து, லாரி ஏறி சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் நிறைய விஷயங்கள் நடந்து விட்டது. இதில் யார் மீது கோவப்பட வேண்டுமோ அவர்கள் மீது யாருமே கோபம் கொள்ளவில்லை. தேவையில்லாமல் லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர் மீதும் புகார் கூறுகிறார்கள். இவர்களுக்கு எதிராக நீங்கள் ஹேஷ்டேக் போடுவீர்கள் என்று நம்புகிறேன்.

மிக முக்கியம்

மிக முக்கியம்

சமூக வலைத்தளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும். சமூக வலைத்தளங்கள் மூலம் நாம் போராட வேண்டும். சமுதாயத்தின் நலனுக்காக நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன், என்று விஜய் பேசினார்.

போராடி வருகிறார்கள்

போராடி வருகிறார்கள்

இதில் இருந்தே விஜய் ரசிகர்கள் சமுதாய பிரச்சனைகளுக்காக போராடி வருகிறார்கள். ஆடியோ லான்ச் விழாவிற்கு மறுநாளே சுபஸ்ரீக்கு நீதி வேண்டி, #JusticeForSubaShree என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர். இந்த டேக் தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் டிரெண்டானது.

இப்போது என்ன

இப்போது என்ன

இந்த நிலையில் தற்போது தேனியை உலுக்கும் நியூட்டிரினோ பிரச்சனை குறித்து விஜய் ரசிகர்கள் பேச தொடங்கி உள்ளனர். 2015-ம் ஆண்டு தேனி மாவட்டம் பொட்டிபுரத்திலுள்ள, அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க ரூ.1500 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் துவங்கின.

என்ன சண்டை

என்ன சண்டை

மலையையே குடைந்து நடத்தப்படும் இந்த ஆராய்ச்சியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு மக்களுக்கு கொடூரமான நோய்கள் ஏற்படும் என்று புகார் வைக்கப்பட்டது. இதனால் இந்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த நியூட்டிரினோ திட்டத்திற்கு எதிராக தற்போது விஜய் ரசிகர்கள் களமிறங்கி உள்ளனர்.

செம பாஸ்

இதற்காக விஜய் ரசிகர்கள் #SaveTheniFromNEUTRINO என்ற டேக்கை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் #SaveTheniFromNEUTRINO டேக் உருவாக்கப்பட்ட சில நிமிடத்தில் தற்போது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. இந்த டேக் தற்போது தேசிய அளவில் 1வது இடத்தில் டிரெண்டாகி வருகிறது.

சொந்த ஊர் பாஸ்

என்னுடைய சொந்த ஊரை காப்பாற்றுங்கள் என்று இந்த விஜய் ரசிகர் டிவிட் செய்துள்ளார்.

என்ன ரசிகர்கள்

இந்த பிரச்சனை தொடர்பாக டிவிட் செய்து வரும் விஜய் ரசிகர்கள் அனைவரையும் இவர் பாராட்டி இருக்கிறார்.

ஒரே ஆள்

எல்லா சமுதாய பிரச்சனைக்கும் குரல் கொடுக்கும் ஒரே ஹீரோ விஜய், அவரிடம் இருந்து மற்றவர்களும் கற்க வேண்டும் என்று இவர் கூறியுள்ளார்.

Read more about: vijay bigil விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X