'மகாநதி' படம் பார்த்து கண்கலங்கிய சாவித்ரி மகள்.. கீர்த்தி சுரேஷுக்கு பாராட்டு!
Recommended Video

சென்னை : நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமான 'மகாநதி' தெலுங்கில் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. தமிழில் 'நடிகையர் திலகம்' எனும் பெயரில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருக்கிறது.
நாக் அஷ்வின் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். அவரது காதல் கணவர் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். பத்திரிகை நிருபர்களாக சமந்தாவும், விஜய் தேவரகொண்டாவும் நடித்துள்ளனர்.

ரிலீஸுக்கு முன்பு இப்படத்தின் சிறப்புக்காட்சி சாவித்ரியின் குடும்பத்தினருக்கு திரையிட்டு காட்டப்பட்டது. சாவித்ரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி இப்படத்தை வெகுவாக ரசித்துப் பார்த்துள்ளார்.
படத்தைப் பார்க்கும்போதே பல இடங்களில் கண்கலங்கி விட்டாராம் சாவித்ரியின் மகள். திரையில் நிஜமாகவே தனது அம்மா சாவித்ரியைப் பார்த்ததுபோலவே இருந்ததாம். படம் முடிந்ததுமே, சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷை பாராட்டி குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார் விஜய சாமுண்டீஸ்வரி.
கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடிப்பதாகத் தகவல் வெளியானதுமே நெட்டிசன்கள் கலாய்க்கத் தொடங்கிவிட்டனர். ஆனால், தற்போது வெளியான புகைப்படங்களில் சாவித்ரியைப் போலவே தோற்றம் கொண்டிருக்கும் கீர்த்தியை வியந்து பாராட்டத் தொடங்கிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











