ஜெய்பீம் காலண்டர் காட்சியை மிஞ்சும் குறியீடுகள் இந்த பாடலில் இருக்கு.. சவுக்கு சங்கர் பேச்சு!

சென்னை: பறை இசை வெளியீட்டு விழாவில் சவுக்கு சங்கர் கலந்து கொண்டு பேசியது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் சினிமா விழாவுக்கு தன்னை ஏன் அழைத்தார்கள் என யோசித்ததாகவும், பிறகு பறை பாடலை பார்த்ததும் அதன் கருத்துக்காக தன்னை அழைத்துள்ளனர் என்பதை புரிந்து கொண்டதாகவும் செம சுவாரஸ்யமாக பேசியுள்ளார்.

ஜெய்பீம் படத்தின் மூலம் இயக்குநர் ஞானவேல் போட்டுக் கொடுத்த பாதை தான் இப்படியொரு பாடல் உருவாக காரணம் என தான் கருதுவதாகவும் தனது கருத்தை முன் வைத்த அவர் ஏகப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் மேடையில் எடுத்து வைத்துள்ளார்.

பறை இசை வெளியீட்டு விழா

பறை இசை வெளியீட்டு விழா

பறை எனும் டைட்டிலில் உருவாகி உள்ள சமூக கருத்துக்கள் அடங்கிய ஆல்பம் வெளியீட்டு விழாவில் சவுக்கு சங்கர், ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல், நடிகர் ஹரிஷ் கல்யாண், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். ஜெய்பீம் பட இயக்குநர் மாட்டுக்கறி சாப்பிடுவது பற்றி காரசாரமாக பேசிய நிலையில், சவுக்கு சங்கர் பேசிய விஷயங்களும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

சவுக்கு சங்கர் பேச்சு

சவுக்கு சங்கர் பேச்சு

சினிமா நிகழ்வில் என்னை அழைத்தது ஏன் என யோசித்தேன் என தனது பேச்சைத் தொடங்கிய சவுக்கு சங்கர் இந்த பாடலை பார்த்ததும் தான் அதில், கூறியுள்ள கருத்துக்களாகத் தான் தன்னை இயக்குநர் அழைத்துள்ளார் என்பதை புரிந்து கொண்டேன் என்று பேசினார். ஜெய்பீம் படத்தின் மூலம் இயக்குநர் ஞானவேல் ஏகப்பட்ட கதவுகளை திறந்து விட்டு இருக்கிறார் என்றும் கூறினார்.

சாதிச் சான்றிதழ் பிரச்சனைக்கு தீர்வு

சாதிச் சான்றிதழ் பிரச்சனைக்கு தீர்வு

ஜெய்பீம் படத்தை சூர்யா தயாரித்து நடித்தார் அதை அமேசான் பிரைமுக்கு விற்றார் என்பதை தாண்டி அந்த படம் சமூகத்தில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதைத் தான் இங்கே கவனிக்க வேண்டும். இருளர் இன மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க அதிகாரிகள் தயங்கி வந்த நிலையில் அவர்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று விசாரித்து சாதிச் சான்றிதழ்களை வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருப்பது மிகப்பெரிய மாற்றம் என்றார்.

காலண்டர் குறியீடு

காலண்டர் குறியீடு

மேலும், ஜெய்பீம் திரைப்படத்தில் வந்த 8 செகண்ட் காலண்டர் குறியீடு எந்தளவுக்கு சர்ச்சையை கிளப்பியது என்பது அனைவருக்கும் தெரியும் இந்த பாடலில் அதை விட ஏகப்பட்ட குறியீடுகள் குவிந்து கிடக்கின்றன. அதையெல்லாம் பார்த்து விட்டு பொங்கி எழுந்தால், இந்த பாடலுக்கும் ஒரு நல்ல புரமோஷனாக இருக்கும் என்றும் போகிற போக்கில் தனக்கே உரிய பாணியில் பேசி ஸ்கோர் செய்துள்ளார் சவுக்கு சங்கர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X