தயாரிப்பாளரின் அந்த உறுப்பில் எட்டி உதைத்த சவுக்கு சங்கர்?.. ஆத்தாடி இப்படியும் நடந்ததா?.. பகீர் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் பிரபலமான யூடியூபர்களில் ஒருவரான சவுக்கு சங்கர் தயாரிப்பாளர் ஒருவரை மிரட்டி பணம் பறித்ததாக கூறி அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருடன் பணியாற்றும் மாலதி உள்ளிட்ட நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள். இந்நிலையில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மகேஷ் ரம்பா என்ற தயாரிப்பாளர் அதிர்ச்சி தரும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், அவருடன் பணியாற்றும் மாலதி உள்ளிட்டோர் தயாரிப்பாளர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்கள். இவ்விவகாரம் நேற்றிலிருந்து சோஷியல் மீடியாவில் பற்றிக்கொண்டு எரிகிறது. கைதாவதற்கு முன்பு காவல் துறையினர் தன்னிடம் நடந்துகொண்டதை வீடியோவாகவும் வெளியிட்டிருந்தார் சங்கர். இந்நிலையில் தயாரிப்பாளர் மகேஷ் ரம்பா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பல பகீர் தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.
மகேஷின் அறிக்கை: அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "நான் Red & Follow படத்தின் தயாரிப்பாளர். நான் கொடுத்த புகாரின் பேரில் நேற்று சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இதன் விபரம் நான் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது தவறுதலாக அவர் பதிவிட்ட என் படம் சம்பந்தமான விஷயங்களை நீக்க கோரியபோது ரூபாய் 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டி அனுவலகத்திற்கு வரச்சொன்னார்.
உயிர் நாடியில் எட்டி உதைத்தார்: 30.06.2025 அன்று நான் அவரது அலுவலகத்துக்கு சென்றபோது மீண்டும் என்னுடைய படத்தை பற்றி தரக்குறையாக பேசாமல் இருக்க எனக்கு ரூபாய் 10 லட்சம் கொடு. இல்லையென்றால் உன்னுடைய படம் வெளிவராமல் இருக்க நான் வீடியோ வெளியிடுவேன் என்று என்னை பமுறுத்தினார். நான் அதன்பிறகு என்னுடைய கையில் ரூ. 1 லட்சம் உள்ளது என்று கூறினேன். அதற்கு நான் என்ன பிச்சைக்காரனா என்று கையில் இருந்த பணத்தை பிடுங்கி கொண்டு கீழே தள்ளி உயிர் நாடியில் எட்டி உதைத்தார்.

டீமில் உள்ள மாலதியும்: அவர் மட்டுமில்லாமல் அவரது டீமில் உள்ள மாலதியும் அடையாளம் காட்டக்கட்டிய நாள்கு நபர்களும் என்னையும், என்னுடைய படத்தின் இயக்குநரையும் அடித்து கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். அங்கிருந்து தப்பித்தோம் என்று நாங்கள் இருவரும் வெளியே வந்த பிறகு இயக்குனர் அவர்களை சைதாப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்ற பின்பு மறுநாள் நாள் ஜூலை 1ம் தேதியில் நான் கொடுத்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் அவர்களை கைது செய்தனர்.
தவறுதலான பெயர்: தற்போது பத்திரிகை செய்திகளில் தவறுதலாக என்னுடைய பெயரை புருஷோத்தமன் என்று வெளியிடுகின்றனர். ஆனால் புருஷோத்தமன் என்பது என்னுடைய அப்பாவின் பெயர்.(என்னுடைய பெயர் மகேஷ்). மகேஷ் ரம்யா என்பது என்னுடைய மனைவியின் பெயரையும் இணைத்து படம் தயாரிப்பு செய்திருக்கிறேன். தற்போது செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் தவறுதலாக ரூ.2 லட்சம் பிடுங்கி கொண்டார்கள் என்று செய்தி வருகிறது. அது முற்றிலும் தவறான செய்தியாகும். ஏனென்றால் சவுக்கு சங்கர் கைதின் போது வெளியிட்ட வீடியோவில் படித்த விவரத்தின் அடிப்படையில் என்னுடைய அப்பா பெயரையும் 2 லட்சம் பிடுங்கி கொண்டேன் என்று சவுக்கு சங்கர் அவர்களே அந்த வீடியோவில் தவறான செய்தியை பரப்பினார். நான் மற்றும் எனது இயக்குனர் இருவரும் அவரது அலுவலகத்திற்கே வரவே இல்லை என்றும் பொய்யான தகவலை கைதின் போது வெளியிட்டார்.
இதுதான் உண்மையான தகவல்: இதில் ஆயிஷா சாதிக் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தான் கைது செய்ததாகவும் தவறுதலான செய்திகளையும் சில ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. தவறான செய்திகளை ஊடகங்களிருந்து நீக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அதில் ஆயிஷா சாதிக் என்பவர் இயக்குனர் வணக்கம் தமிழா சாதிக் அவர்களி மனைவி ஆவார். அவரும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக இருக்கிறார். இது தான் உண்மையான தகவல். எனவே பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் என்று இந்த கடிதத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன். பத்திரிகை மற்றும் ஊடகங்கள் இதன் உண்மை நிலையை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிரேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











