twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஞ்சலி.. அஞ்சலி.. புஷ்பாஞ்சலி.. மறக்க முடியுமா கத்ரி கோபால்நாத்தின் சாக்ஸோஃபோன் இசையை!

    |

    Recommended Video

    கத்ரி கோபால்நாத்தின் சாக்ஸோஃபோன் இசை-வீடியோ

    மங்களூரு: சாக்ஸோஃபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 69

    சாக்ஸோஃபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் 1950 ஆம் ஆண்டு கர்நாடகாவில் பிறந்தார். சாக்ஸோஃபோன் இசையில் இந்தியாவின் சிறந்த கலைஞர்களில் ஒருவரான கத்ரி கோபால்நாத்தை கவுரவித்து மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது.

    கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கத்ரி கோபால்நாத் மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சைப்பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

    அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி

    அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி

    தமிழில் வெளியான டூயட் படத்தில் கத்ரி கோபால்நாத்தின் சாக்ஸோஃபோன் இசை முழுவதுமாக பயன்படுத்தப்பட்டிருக்கும். ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியான பெரும் ஹிட்டான அஞ்சலி.. அஞ்சலி.. புஷ்பாஞ்சலி.. பாடல் முழுக்க முழுக்க கத்ரி கோபால்நாத்தின் சாக்ஸோஃபோன் இசையை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டிருக்கும்.

    இசையமைப்பாளர்

    இசையமைப்பாளர்

    கத்ரி கோபால்நாத் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். ஒரு மகனான மணிகந்த் கோபால்நாத் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். மற்றொரு மகன் குவைத்தில் உள்ளார்.

    இறுதிச்சடங்கு

    இறுதிச்சடங்கு

    குவைத்தில் இருந்து மகனின் வருகைக்கு பிறகே கத்ரி கோபால்நாத்தின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று மாலை கத்ரி கோபால்நாத்தின் இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிகிறது.

    ஏராளமான விருதுகள்

    ஏராளமான விருதுகள்

    கத்ரி கோபால்நாத் பத்மஸ்ரீ விருது மட்டுமின்றி, ஏராளமான விருதுகளை குவித்திருக்கிறார். மேலும் பல பாராட்டு விழாக்களும் இவருக்கு நடத்தப்பட்டுள்ளன. கேந்த்ர சங்கீத நாடக அகாடமி விருதை வென்றுள்ளார்.

    வெளிநாடுகளில் கவுரவம்

    வெளிநாடுகளில் கவுரவம்

    பராகுவேவில் நடைபெற்ற ஜாஸ் விழா, பெர்லின் ஜாஸ் விழா, மெக்ஸிகோவில் நடைபெற்ற சர்வதேச செர்வாண்டினோ விழா, பாரிஸில் நடந்த மியூஸிக் ஹால் விழா, 1994 ஆம் ஆண்டு லண்டனில் பிபிசி நடத்திய இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல விழாக்களில் கத்ரி கோபால்நாத் கவுரவிக்கப்பட்டுள்ளார்.

    இரங்கல் அஞ்சலி

    கர்நாடக இசைக்கு சாக்ஸோஃபோன் மூலம் மற்றொரு பரிணாமம் கொடுத்த கத்ரி கோபால்நாத்தின் மறைவுக்கு இந்திய திரைத்துறையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடலுக்கு திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    English summary
    saxophone exponent Kadri Gopalnath passed away at a private hospital in Mangaluru today morning. His Saxophone music used in Anjali anjali song in Duet movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X