twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தொடரும் இளம் பெண்கள் மரணம்.. வரதட்சனைக்கு நோ சொல்லுங்கள்.. கொதிக்கும் மோகன் லால்!

    |

    திருவனந்தபுரம்: வரதட்சணை கொடுமையால் இளம்பெண்கள் மரணம் அதிகரித்து வரும் நிலையில் நடிகர் மோகன் லால் பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் இருக்கும் கேரளாவை உருவாக்குவோம் என தெரிவித்துள்ளார்.

    கேரளாவில் அடுத்தடுத்து இளம் பெண்கள் வரதட்சணைக் கொடுமை புகாரில் மரணமடைந்து வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வரலாற்றிலேயே முதல்முறை.. டைம்ஸ் ஸ்கொயரில் இடம்பெற்ற தமிழ் பாட்டு.. எகிறும் தீ-ன் புகழ்!வரலாற்றிலேயே முதல்முறை.. டைம்ஸ் ஸ்கொயரில் இடம்பெற்ற தமிழ் பாட்டு.. எகிறும் தீ-ன் புகழ்!

    கொல்லத்தைச் சேர்ந்த 22 வயது விஸ்மயா வி நாயர் என்ற பெண், சமீபத்தில் தனது கணவர் கிரண்குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    கணவர் கைது

    கணவர் கைது

    விஸ்மயாவின் வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்பட்டது. அவரது உடம்பில் இருந்த காயங்கள், அவர் உறவினருக்கு அனுப்பிய மெஸேஜ்கள் மற்றும் போட்டோக்களின் அடிப்படையில் அவரது கணவர் கிரண் குமார் கைது செய்யப்பட்டார்.

    கணவர் தூண்டுதல்

    கணவர் தூண்டுதல்

    இதனை தொடர்ந்து கடந்த 21 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள விஷின்ஜத்தில் அர்ச்சனா என்ற 24 வயது பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அர்ச்சனாவை அவரது கணவர் சுரேஷ் தற்கொலைக்கு தூண்டியதாக அர்ச்சனாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    வரதட்சணை கொடுமை

    வரதட்சணை கொடுமை

    இதேபோல் கடந்த 21ஆம் தேதி ஆலப்புழாவில் உள்ள வல்லிகுன்னத்தில் சுசித்ரா என்ற பெண் கணவரின் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கணவர் குடும்பத்தினர் அளித்த வரதட்சணை டார்ச்சரே இதற்கு காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

    விவாதங்களில்..

    விவாதங்களில்..

    ஒரு வாரத்தில் அடுத்தடுத்து மூன்று இளம்பெண்கள் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த சம்பவம் அம்மாநில அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தொலைக்காட்சி விவாதங்களிலும் இப்பிரச்சனைதான் பேசப்பட்டு வருகிறது.

    நோ சொல்லுங்கள்

    நோ சொல்லுங்கள்

    இந்நிலையில் பிரபல நடிகரான மோகன் லால் இச்சம்பவம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதாவது, வரதட்சணை வேண்டாம் என்று சொல்லுங்கள். பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் இருக்கும் ஒரு கேரளாவை உருவாக்குவோம்.. என பதிவிட்டுள்ளார்.

    படத்தின் காட்சி

    படத்தின் காட்சி

    மேலும் பெண்களிடம் தங்களுக்கு கல்யாணம் வேண்டாம். தங்களை படிக்க வைக்க வேண்டும். பெண்களுக்கு கல்யாணம் மட்டும் லட்சியம் அல்ல அவர்கள் சுயமாக வாழ வேண்டும் என தனது படத்தில் இளம் பெண்களிடம் பேசும் காட்சியையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் மோகன் லால்.

    English summary
    Actor Mohan lal says, Say No to Dowry. Let’s strive forward and create a Kerala where there’s justice and equality for women.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X