அபாரமான நடிப்பு.. கண்கலங்கி கட்டி அணைத்து முத்தம்.. நடிகையின் தாய் நெகிழ்ச்சி !

சென்னை : கன்னி மாடம் படத்தை பீரிமியர் பார்த்த நாயகியின் தாய் மன நெகிழ்ச்சியில் அழுத படியே தன் மகளை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து பாராட்டினார்.

பிப்ரவரி 21 வெளியாகியுள்ள கன்னி மாடம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் படத்திற்கு பெருமளவு ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. நடிகர் போஸ் வெங்கட் இயக்கியிருக்கும் படம் தான் கன்னி மாடம். சிறந்த நடிகராக வலம் வந்த போஸ் இந்த படத்தின் மூலம் சிறந்த இயக்குனர் என்றும் நிரூப்பித்து இருக்கிறார்.

Saya devi mother was Emotional after seeing kanni maadam

இந்த படத்தின் பீரிமியர் பார்த்த பல பிரபலங்களும் படத்தை பற்றிய தங்களின் கருத்துகளை பகிர்ந்து இருந்தனர். இந்த நிகழ்வில் படத்தின் நாயகியான சயா தேவியின் அம்மாவும் கலந்து கொண்டு படத்தை பார்த்து நெகிழ்ந்து போனார்.

படம் மிகவும் தாக்கம் மிகுந்த படமாக இருந்ததால் பேச முடியாமல் போன நாயகியின் தாய் மன நெகிழ்ச்சியில் அழுத படியே தன் மகளை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து பாராட்டி நெகிழ்ச்சி அடைந்தார்.

Saya devi mother was Emotional after seeing kanni maadam

இந்த நிகழ்வு பார்க்கும் பலரையும் நெகிழ்ச்சியில் ஆற்றியது. நாயகி சயா தேவி நடிகர் மற்றும் இயக்குனரான யார் கண்ணனின் மகளாவார். யார் கண்ணன் யார், அன்பு கட்டளை போன்ற பெரிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர். இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனின் அப்பாவாக நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்து இருப்பார்.

தற்போது தன் கணவர் போல தன் மகளும் சினிமாவில் நுழைந்து சிறந்த நடிப்பை கொடுத்துள்ளது நாயகியின் தாயை மனமகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சயா தேவி கன்னி மாடம் படத்தில் சிறந்த நடிப்பை கொடுத்து இருந்தார். பல இடங்களில் இவரின் நடிப்பு கைதட்டல்களை வாங்கியிருந்தது குறிப்பிடதக்கது .

Saya devi mother was Emotional after seeing kanni maadam

கன்னி மாடம் படம் பார்த்த பலரும் படத்தை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். படம் முடியும் போது நல்ல தாக்கத்தை தந்துள்ளது என்று படம் பார்த்த பலரும் பதிவு செய்துள்ளனர். படத்தின் தயாரிப்பாளரான முகமது ஹசீர் படத்தை வெற்றிபடமாக ஆக்கிய மக்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X