twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அன்று விளம்பர பிரச்சார குழுவில் ஒருவர்.... இன்று தாதா சாகேப் பால்கே பிலிம் சிட்டி டைரக்டர்

    |

    மும்பை: சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார விளம்பரத்தை தயாரித்த குழுவில் இடம் பெற்ற சயாலி குல்கர்னி என்ற பெண்மணி, தாதா சாகேப் பால்கே ஃபிலிம் சிட்டியின் புதிய டைரக்டராக நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    கடந்த 100 ஆண்டுகளில் இந்திய திரைப்பட தொழில் பல மாற்றங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்த ஒட்டுமொத்தமாக உலகமயமாக்கல், பெரிய நிறுவனமாக ஆக்குதல் என பல்வேறு மாற்றங்களை சர்வதேச அளவில் மாற்றுவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்திவருகிறது.

    Sayali Kulkarni appointed as New Director for Dada Saheb Phalke Film city

    அந்த வகையில் முக்கால்வாசி இந்திய திரையுலகின் தயாரிப்புகளும் நடக்கும் இந்தியாவின் மிக பெரிய ஸ்டூடியோ மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் மும்பையில் உள்ள தாதா சாகேப் பால்கே ஃபிலிம் சிட்டியில் தான். இதில் ரெகார்டிங் ரூம்கள், தோட்டங்கள், மைதானங்கள், திரையரங்குகள், ஏரிகள், கோயில்கள், சிறை ,நீதிமன்றம், சுற்றுலா இடங்கள், நீரூற்றுகள், மலைகள், கிராமங்கள் என படப்பிடிப்புக்கு தேவையான அனைத்தும் இங்கு உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து பாலிவுட் திரைப்படங்களுக்கான படப்பிடிப்பும் இங்கு நடைபெறும்.

    இந்த ஃபிலிம் சிட்டியின் புதிய டைரக்டராக சாலை பாதுகாப்பு பிரச்சாரத்திற்காக விருது பெற்ற 25 வயதான சயாலி குல்கர்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனது முற்போக்கு சிந்தனை ஆற்றல் மூலம் கலாச்சார வளர்ச்சியை ஃபிலிம் சிட்டியில் ஏற்படுத்தி அதை சர்வதேச அளவில் உயர்த்துவார் என்ற நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இன்று சமூகத்தில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு நடுவில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை பாதுகாப்பு குறித்த விளம்பரத்தில் பிராண்ட் அம்பாசிடராக இருக்கிறார் அக்ஷய் குமார். ரோடு கிசி கே பாப் கி நஹி ஹை எனும் இந்த விளம்பரம் 2018ஆம் ஆண்டின் சிறந்த விளம்பர பிரச்சாரத்திற்கான விருதை தட்டி சென்றுள்ளது.

    இது ஒரு நன்கு பேர் அடங்கிய குழுவின் மூலம் சித்தரிக்கப்பட்ட விளம்பரம். அதில் 25 வயது சயாலி குல்கர்னியும் ஒருவர் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 22ஆம் தேதி அன்று அவர் டைரக்டராக நியமிக்கப்பட்டார். அப்போது அவர் இந்த வாய்ப்பை அளித்தமைக்கு நன்றி தெரிவித்து, தனக்கு இந்த நியமனம் மிகவும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கிறது. எனக்கு இது நிறைய பொறுப்புணர்வை தருகிறது. என்னால் முடிந்த வரை எனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சிறந்த முறையில் பாசிட்டிவாக செய்து முடிப்பேன் என்றார்.

    அவரது பணி இனிதே தொடங்க எங்களது வாழ்த்துக்கள்.

    English summary
    Sayali Kulkarni, who was on the team that produced the Road Safety Awareness Campaign, now she has been appointed as a new director for Dada Saheb Phalke Film City.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X