மாஸ்டர் உடன் செம ரொமான்டிக்காக சால்சா நடனம் ஆடி அசத்திய ஆர்யாவின் மனைவி!

சென்னை : வனமகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சாயிஷா.

ஆரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் காப்பான் மற்றும் டெடி ஆகிய திரைப்படங்களில் இணைந்து ஜோடியாக நடித்துள்ளனர்.

நடனத்தில் பெரும் ஆர்வம் கொண்ட சாயிஷா இப்பொழுது மாஸ்டருடன் செம ரொமான்டிக்காக சால்சா நடனம் ஆடிய வீடியோ வைரலாகிக் கொண்டுள்ளது.

மீண்டும் இணைந்த டெடி

மீண்டும் இணைந்த டெடி

தமிழ் சினிமாவில் சமீபத்திய நட்சத்திர கப்புல் லிஸ்டில் இணைந்த ஆர்யா மற்றும் சாயிஷா பல திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்தும் வருகின்றனர். காப்பான் திரைப்படத்தில் முதல் முறையாக இணைந்து நடித்த ஆர்யா மற்றும் சாயிஷா மீண்டும் இணைந்த டெடி பெரும் எதிர்பார்ப்பில் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி அனைவரையும் கவர்ந்து வெற்றி பெற்றது.

நடனம் அனைவராலும் கவனிக்கப்பட்டு

நடனம் அனைவராலும் கவனிக்கப்பட்டு

தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அறிமுகப்படுத்தப்பட்டு இப்பொழுது தமிழில் முழு கவனத்துடன் நடிப்பில் இறங்கியிருக்கும் சாயிஷா தமிழ் சினிமாவிற்கு வனமகன் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருந்தார். ஏ எல் விஜய் இயக்கியிருந்தார்.

பெரும் ஆர்வம்

பெரும் ஆர்வம்

முதல் படத்திலேயே சாயிஷாவின் நடனம் அனைவராலும் கவனிக்கப்பட்டு மிகப் பிரபலமாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. நடனத்தில் பெரும் ஆர்வம் கொண்ட இவர் அதில் அனைத்துக் கலைகளையும் கற்றுக் கொண்டு அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனம் ஆடி அசத்திய வீடியோக்களை பதிவிட்டு பாராட்டுக்களைப் பெற்று வந்தார்.

சால்சா நடனமாடி ரிகர்சல்

சால்சா நடனமாடி ரிகர்சல்

இந்த வகையில் இப்பொழுது டான்ஸ் மாஸ்டருடன் இணைந்து செம ரொமான்டிக்காக சால்சா
நடனமாடி ரிகர்சல் செய்த வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அனைவரும் பொறாமைப்படும் அளவிற்கு நேர்த்தியாக இருக்கும் சாயிஷாவின் சால்சா டான்ஸ் இப்பொழுது இணையத்தை கலக்கி கொண்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X