அதுக்குள்ள என்னாச்சு? அந்த சீனியர் ஹீரோ படத்தில் இருந்து திடீரென விலகினார் சாயிஷா!
சென்னை: அந்த சீனியர் ஹீரோ ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நடிகை சாயிஷா விலகியுள்ளார்.
ராம் நடித்த அகில் என்ற தெலுங்கு படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாயிஷா. ஜெயம் ரவியின் வனமகன் என்ற படம் மூலம் தமிழுக்கு வந்தார்.
தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான் படங்களில் நடித்துள்ளார். இப்போது டெடி படத்தில் நடித்திருக்கிறார்.

கஜினிகாந்த் காதல்
இந்தியில், அஜய் தேவ்கன் ஜோடியாக ஷிவாய் என்ற படத்தில் நடித்திருந்தார். நடிகர் ஆர்யாவும் சாயிஷாவும் கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது காதல் வயப்பட்டனர். பின்னர் இருவீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தற்காலிக டைட்டில்
பிரபல தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணா, இப்போது நடிக்கும் படத்துக்கு என்பிகே 106 என தற்காலிகமாக டைட்டில் வைத்துள்ளனர். இந்தப் படத்தை போயபதி ஶ்ரீனு இயக்குகிறார். இதில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க பல்வேறு ஹீரோயின்களிடம் பேசிவந்தனர்.
இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கப்பட்டது.

ஹீரோயின் இல்லாமல்
கொரோனா அச்சுறுத்தலால், முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துப் படக்குழு திரும்பியது. ஹீரோயின் இல்லாமலேயே அந்த படப்பிடிப்பு நடந்தது. சிம்ஹா, லெஜண்ட் ஆகிய பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களுக்குப் பிறகு போயபடி சீனு - பாலகிருஷ்ணா இணையும் 3-வது படம் இது.

பிரயாகா மார்ட்டின்
இரண்டு ஹீரோயின்களை கொண்ட கதை என்பதால், முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. பின்னர் பிசாசு படத்தில் நடித்த பிரயாகா மார்ட்டின் ஒரு ஹீரோயினாக ஒப்பந்தமானார். டெஸ்ட் ஷூட் முடிந்து பார்த்தபோது இருவருக்குமான கெமிஸ்ட்ரி சரியாக இல்லை.

அவரும் விலகல்
இதையடுத்து பிரக்யாவுக்குப் பதிலாக வேறு ஹீரோயின் தேடி வந்தனர். பின்னர், நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷா நடிப்பதாகக் கூறப்பட்டது. இதைப் படக்குழு உறுதிப்படுத்தி இருந்தது. இந்நிலையில் அவரும் படத்தில் இருந்து விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

தெரிய வில்லையே
இப்போது வேறு ஹீரோயினை தேடி வருகின்றனர். என்ன பிரச்னை என்று தெரியவில்லையே என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். படத்தை துவாராகா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு, தமன் இசைக்கிறார். இதன் ஷூட்டிங் மீண்டும் தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications











