»   »  விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் இஞ்சி இடுப்பழகி: பொறாமையில் சக நடிகைகள்

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் இஞ்சி இடுப்பழகி: பொறாமையில் சக நடிகைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் சயீஷா சைகல்.

பாலிவுட் நடிகை சயீஷா சைகல் வனமகன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆனார். இந்நிலையில் அவர் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜய் சேதுபதிக்கு ஜோடியாகியுள்ளார்.

மேலும் ஒரு பெரிய ஹீரோவுக்கும் ஜோடியாக உள்ளாராம்.

ஜுங்கா

ஜுங்கா

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் ஜுங்கா. படத்தின் பெரும்பாலான காட்சிகள் பாரீஸ் நகரில் படமாக்கப்படுகிறது. இந்த படத்தில் தான் விஜய் சேதுபதுக்கு ஜோடியாக நடிக்கிறார் சயீஷா.

சயீஷா

சயீஷா

இயக்குனர் கதையை சொன்னதும் சயீஷாவுக்கு பிடித்துவிட்டதாம். அதனால் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார் என்று கூறப்படுகிறது. சயீஷா பாரீஸில் பிறந்து, வளர்ந்த பெண்ணாக நடிக்கிறாராம்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

கதை நகரும்போது விஜய் சேதுபதி பாரீஸ் செல்கிறாராம். அதன் பிறகு அங்கு என்ன நடக்கிறது என்பது தான் மீதிக் கதையாம். முன்னதாக கோகுல் விஜய் சேதுபதியை வைத்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வனமகன்

வனமகன்

வனமகன் படத்தை அடுத்து பிரபுதேவா இயக்கும் கறுப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சயீஷா. ஆனால் அந்த பட வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஜுங்காவில் நடிக்கவிருக்கிறார்.

English summary
According to reports, Sayeesha Saigal is acting as the love interest of Vijay Sethupathi in his upcoming movie Junga being directed by Gokul.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil