அந்த நடிகை திடீர் நீக்கம்.. சீனியர் ஹீரோ ஜோடியானார் பிரபல நடிகரின் மனைவி.. விரைவில் ஷூட்டிங்!

By

சென்னை: தெலுங்கு படத்தில் சீனியர் ஹீரோ ஜோடியாக நடிகை சாயிஷா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

பிரபல தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணா. இவர் இப்போது நடிக்கும் படத்துக்கு என்பிகே 106 என்று தற்காலிக டைட்டில் வைத்துள்ளனர்.

இந்தப் படத்தை போயபதி ஶ்ரீனு இயக்குகிறார். இதில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க பல்வேறு ஹீரோயின்களிடம் பேசிவந்தனர்.

ஹீரோயின் இல்லாமல்

ஹீரோயின் இல்லாமல்

இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தலால், முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துப் படக்குழு திரும்பியது. ஹீரோயின் இல்லாமலேயே முதற்கட்டப் படப்பிடிப்பு நடந்தது. சிம்ஹா, லெஜண்ட் ஆகிய பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களுக்குப் பிறகு போயபடி சீனு - பாலகிருஷ்ணா இணையும் 3-வது படம் இது.

கெமிஸ்ட்ரி சரியில்லை

கெமிஸ்ட்ரி சரியில்லை

இரண்டு ஹீரோயின்களை கொண்ட கதை என்பதால், முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. பின்னர் பிசாசு படத்தில் நடித்த பிரயாகா மார்ட்டின் ஒப்பந்தமானார். டெஸ்ட் ஷூட் முடிந்து பார்த்தபோது இருவருக்குமான கெமிஸ்ட்ரி சரியாக இல்லை என்பது தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது.

வேறு ஹீரோயின்

வேறு ஹீரோயின்

இதையடுத்து பிரக்யாவை மாற்றிவிட்டனர். அவருக்குப் பதிலாக வேறு ஹீரோயின் தேடி வந்தனர். இப்போது, நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷா நடிக்கிறார். இதைப் படக்குழு தெரிவித்துள்ளது. துவாராகா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு, தமன் இசைக்கிறார். விரைவில் இதன் ஷூட்டிங் மீண்டும் தொடங்குகிறது.

கடைக்குட்டி சிங்கம்

கடைக்குட்டி சிங்கம்

இன்னொரு ஹீரோயினாக பிரக்யா ஜெய்ஸ்வால் நடிக்கிறார். இவர், தமிழில், விரட்டு என்ற படத்தில் நடித்திருக்கிறார். நடிகை சாயிஷா, வனமகன் என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான் படங்களில் நடித்துள்ளார். இப்போது டெடி படத்தில் நடித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X