ஆர்யாவுடன் 'வனமகன்' சாயிஷா... - தாய்லாந்தில் 'கஜினிகாந்த்' ஷூட்டிங்!

By Vignesh Selvaraj

சென்னை : ஹரஹர மஹாதேவகி படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் திரைப்படம் 'கஜினிகாந்த்'. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த போஸ்டரில் 'தர்மத்தின் தலைவன்' படத்தின் ரஜினி கேரக்டரை இமிடேட் செய்திருந்தார் ஆர்யா.

இந்நிலையில், 'கஜினிகாந்த்' படத்தின் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் ஷேர் செய்திருக்கிறார் படத்தின் ஹீரோயின் சாயிஷா.

கஜினிகாந்த்

'கஜினிகாந்த்' படத்தில் ஆர்யா ஜோடியாக 'வனமகன்' சாயிஷா நடிக்கிறார். பாலமுரளி இசையமைக்கிறார். இந்தப் படம் நானி நடிப்பில் தெலுங்கில் வெளிவந்து வெற்றிபெற்ற 'பலே பலே மஹாடிவொய்' படத்தின் ரீ-மேக் எனக் கூறப்படுகிறது.

இயக்குநர் ஹாட்ரிக்

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடித்து வெளிவந்த 'ஹர ஹர மகாதேவகி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சந்தோஷ் பி. ஜெயக்குமார். அடுத்து 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தையும் சந்தோஷ் இயக்க தயாரித்த ஸ்டூடியோ க்ரீன் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.

ஷூட்டிங் தொடக்கம்

ஷூட்டிங் தொடக்கம்

'கஜினிகாந்த்' படத்தின் ஷூட்டிங் தற்போது தாய்லாந்தில் தொடங்கியிருக்கிறது. இந்தப் படத்தில் காமெடி நடிகர்கள் சதீஷ், கருணாகரன் ஆகியோரும் நடிக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங்கின்போது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார் வனமகன் சாயிஷா.

ஆர்யா பற்றி சாயிஷா

ஆர்யா பற்றி சாயிஷா

"விளையாட்டும், அன்பும் நிறைந்த சக நடிகருடன் ஷூட்டிங்கில் இருக்கிறேன்" எனக் குறிப்பிட்டு ஆர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் ஷேர் செய்திருக்கிறார் 'கஜினிகாந்த்' ஹீரோயின் ஆர்யா.

More from Filmibeat

Read more about: arya new movie ஆர்யா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X