சமந்தாவையே தூக்கி சாப்பிட்ட ஆர்யா மனைவி.. சிம்புவுக்காக இப்படியொரு குத்தாட்டம் போட்டுருக்காரே!
சென்னை: வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சாயிஷா. நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்ட அவர், பத்து தல படத்தில் 'ராவடி' பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.
ஒபெலி என். கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் நடிப்பில் உருவாகி உள்ள பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான ராவடி பாடலுக்குத் தான் நடிகை சாயிஷா அப்படியொரு ஆட்டத்தை போட்டுள்ளார்.

சிம்புவுக்கு ஜோடி இல்லை
பத்து தல படத்தில் ஏஜிஆர் எனும் வயதான மணல் மாஃபியா டானாக சிம்பு நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடி இல்லை. கவுதம் கார்த்திக்கு ஜோடியாகத் தான் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இந்த விஷயத்தை இசை வெளியீட்டு விழா மேடையிலேயே சிம்பு கிண்டலாக பேசி இருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சாயிஷா குத்தாட்டம்
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள பத்து தல படத்தின் ராவடி பாடலில் நடிகர் கவுதம் கார்த்திக் உடன் இணைந்து நடிகை சாயிஷா குத்தாட்டம் போட்டுள்ள தகவலை படத்தின் இயக்குநர் கிருஷ்ணா கூறியிருந்தார். மேலும், கவுதம் கார்த்தியுடன் செம ஹாட்டான உடையில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் காட்சிகள் திரையில் தோன்றி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தின.

ஆர்யா மனைவி
ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வனமகன் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் சாயிஷா. விஜய்சேதுபதி உடன் ஜுங்கா, கார்த்தி உடன் கடைக்குட்டி சிங்கம், சூர்யாவுடன் காப்பான் படங்களில் நடித்த சாயிஷா, ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்த நிலையில், இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு டெடி படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார் சாயிஷா.

மீண்டும் சினிமா
25 வயதே ஆகும் நடிகை சாயிஷா அதற்குள் திருமணம் செய்து கொண்டு குழந்தையை பெற்றுக் கொண்ட நிலையில், சினிமாவில் இருந்து சற்றே விலகி இருந்தார். இந்நிலையில், சமீப காலமாக மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் சாயிஷா. பத்து தல படத்தின் ராவடி பாடல் ஹிட் ஆகிவிட்டால் மேலும், பல படங்களில் நடனம் ஆடும் வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமந்தாவுக்கு போட்டியாக
அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் சமந்தா ஓ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சி பொங்க குத்தாட்டம் போட்டிருந்தார். இந்நிலையில், சிம்புவின் பத்து தல படத்துக்கு சமந்தாவை விட செம ஹாட்டாக சாயிஷா கவர்ச்சி நடனம் போட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மார்ச் 30ம் தேதி சாயிஷாவின் வெறித்தனமான ஆட்டத்தை ரசிகர்கள் தியேட்டரில் கண்டு ரசிக்க உள்ளனர்.


Click it and Unblock the Notifications











