கர்ப்பமாக இருக்கிறாரா சாயிஷா.. ‘டெடி’ மூலம் சூசகமாக என்ன சொல்கிறார்?

நடிகை சாயிஷா கர்ப்பமாக இருப்பதாக ஒரு தகவல் உலா வருகிறது.

By Staff

Recommended Video

Arya Sayeesha: ஆர்யா, சாயிஷா ஜோடி சேர்ந்து நடிக்கும் புதிய படம்

சென்னை: நடிகர் ஆர்யாவின் மனைவியும், நடிகையுமான சாயிஷா கர்ப்பமாக இருப்பதாக ஒரு தகவல் உலா வருகிறது.

கஜினிகாந்த் படத்தில் சேர்ந்து நடித்த போது, ஆர்யாவும், சாயிஷாவும் காதலிக்கத் தொடங்கினர். இவர்களது காதலுக்கு இருவீட்டிலும் பச்சைக் கொடி காட்டவே, கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு மீண்டும் இருவரும் படங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், சாயிஷா தனது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் ஆர்யாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் போட்டு, சில எமோட்டிகான்களை பதிவு செய்திருந்தார். அதில் ஒன்று குழந்தை போன்று இருந்ததால், சாயிஷா கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் வைரலானது.

 அமைதியோ அமைதி:

அமைதியோ அமைதி:

இருவரும் காதலிக்கிறார்கள் என்ற தகவல் கசிந்தபோதே, ஆர்யாவும், சாயிஷாவும் அமைதியாகத் தான் இருந்தார்கள். சில மாதங்களுக்குப் பிறகு காதலர் தினத்தன்று தான் அவர்கள் தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.

 வைரலாகும் செய்தி:

வைரலாகும் செய்தி:

அதேபோன்று தற்போது கர்ப்பம் விவகாரத்திலும் இருவரும் ஆம் என்றும் சொல்லாமல், இல்லை என்றும் மறுக்காமல் இருப்பது ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சாயிஷா, ஆர்யா தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்ற தகவல் சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

மீண்டும் ஜோடி:

மீண்டும் ஜோடி:

ஆனால், தான் கர்ப்பமாக இல்லை என்பதை சாயிஷா மறைமுகமாக புதிய படம் மூலம் ரசிகர்களுக்குத் தெரியப்படுத்தி இருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு ஆர்யாவும், சாயிஷாவும் மீண்டும் டெடி படத்தின் மூலம் திரையில் ஜோடி சேர்ந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கியது.

ரசிகர்கள் சந்தேகம்:

ரசிகர்கள் சந்தேகம்:

சாயிஷா கர்ப்பமாக இருந்தால் இப்படத்தில் நடிக்க எப்படி சம்மதித்திருப்பார்? இதன் மூலம் சாயிஷா கர்ப்பமாக இல்லை என்பது ஏறக்குறைய உறுதியாகி இருக்கிறது. ஆனபோதும், ஆர்யாவோ அல்லது சாயிஷாவோ அதிகாரப்பூர்வமாக இது பற்றி பேசினால் மட்டுமே, இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X