பத்து தல படத்தில் குத்தாட்டம் போட்ட ஆர்யா மனைவி.. சம்பளம் எவ்வளவுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

சென்னை: நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷா மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் மற்றும் கவுதம் மேனன் நடிப்பில் உருவாகி உள்ள பத்து தல படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள ராவடி பாடலுக்கு சாயிஷா குத்தாட்டம் போட்டுள்ளார்.

அதற்காக நடிகை சாயிஷா வாங்கிய சம்பளம் தொடர்பான தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.

காதல் திருமணம்

காதல் திருமணம்

வனமகன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை சாயிஷா ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் படத்தில் நடித்த நிலையில், இருவரும் காதலித்தனர். காப்பான் படத்திற்கு பின்னர் சாயிஷா மற்றும் ஆர்யா இருவரும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், அழகான பெண் குழந்தை ஒன்றும் இந்த தம்பதியினருக்கு பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு அரியானா என பெயரிட்டு வளர்த்து வருகின்றனர்.

பத்து தல படத்தில் குத்தாட்டம்

பத்து தல படத்தில் குத்தாட்டம்

இயக்குநர் ஒபெலி என். கிருஷ்ணா கேட்டுக் கொண்டதும் உடனடியாக நடிகை சாயிஷா பத்து தல படத்தில் ஐட்டம் நம்பருக்கு ஆட்டம் போட ஒத்துக் கொண்டு செம குத்தாட்டம் ஒன்றையும் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான ராவடி பாடலுக்கு ஆடி உள்ளார். இந்த பாடலில் கவுதம் கார்த்திக் உடன் இணைந்து செம ஹாட்டாக நடனமாடி உள்ளார் நடிகர் ஆர்யாவின் மனைவியான சாயிஷா.

சம்பளம் இவ்வளவா

சம்பளம் இவ்வளவா

நடிகை சமந்தா புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாட சில பல கோடிகள் சம்பளமாக பெற்ற நிலையில், சாயிஷா இந்த பாடலுக்கு நடனமாட வெறும் 40 லட்சம் மட்டுமே சம்பளமாக வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னணி நடிகைகளை வைத்து நடனம் அமைத்திருந்தால் தயாரிப்பு தரப்புக்கு சில கோடிகள் செலவாகி இருக்கும் என்பதால் சாயிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறுகின்றனர்.

ஹீரோயினாக நடித்தாலே

ஹீரோயினாக நடித்தாலே

நடிகை சாயிஷா ஹீரோயினாக நடித்த படங்களுக்கே 30 முதல் 40 லட்சம் தான் சம்பளமாக வாங்கி வந்தார் என்றும் ஒரு பாடலுக்கே இவ்வளவு தொகை என்பது அவருக்கு ரொம்பவே அதிகம் என்றும் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. கன்னடத்தில் சிம்பு நடித்த ரோலில் சிவராஜ்குமார் நடித்திருந்தார். பத்து தல படத்தை பெரிதாக ரஜினிகாந்தை வைத்து எடுக்க நினைத்த கிருஷ்ணா கடைசியில் சிம்புவை வைத்து எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யா அனுமதி

ஆர்யா அனுமதி

திருமணத்துக்கு பிறகு குழந்தையை பெற்றுக் கொண்டு வளர்த்து வந்த நடிகை சாயிஷா மீண்டும் சினிமாவில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார். தனது மனைவியின் விருப்பத்துக்கு எந்தவொரு தடையும் சொல்லாமல் நடிகர் ஆர்யாவும் சாயிஷா மீண்டும் சினிமாவில் நடிக்க க்ரீன் சிக்னல் கொடுத்திருப்பதாகவும் கூறுகின்றனர். சீக்கிரமே ஹீரோயினாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த வாரம் ரிலீஸ்

அடுத்த வாரம் ரிலீஸ்

சிம்பு ஏஜிஆர் ஆக மிரட்ட உள்ள பத்து தல திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அடுத்த வாரம் மார்ச் 30ம் தேதி உலகம் முழுவதும் பத்து தல படம் வெளியாக உள்ளது. நீண்ட காலம் கழித்து சாயிஷா குத்தாட்டம் போட்டுள்ள நிலையில், அதை கண்டு ரசிக்கவே ஒரு கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X