நீங்கள் கணவராக கிடைத்தில் எனக்கு பெருமை.. சாயிஷா வாழ்த்து!

சென்னை : வனமகன் திரைப்படத்தில் அசத்தலான நடிப்பு அசந்துபோகும் நடனம் என தமிழ் ரசிகர்களை முதல் படத்திலேயே மிரள வைத்தவர் நடிகை சாயிஷா.

தெலுங்கில் பிரபலமான மூத்த நடிகர் ஒருவருடன் இணைந்து நடிக்க உள்ளதாக வெளியான தகவலை அடுத்து இப்போது அந்த படத்தில் இருந்து திடீரென விலகி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சென்ற ஆண்டு நடிகர் ஆர்யாவை திருமணம் செய்துகொண்ட இவர் ஆர்யாவின் பிறந்த நாள் மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் இருவரும் இருக்கும் செம க்யூட்டான புகைப்படத்தை பதிவிட்டு கணவருக்கு வாழ்த்து சொல்லி இருப்பது அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

தொடர்ந்து ஹிந்தியிலும்

தொடர்ந்து ஹிந்தியிலும்

மெச்சும் அழகும் அசாத்திய திறமையும் கொண்ட நடிகை சாயிஷா நடிகர் நாகார்ஜுனாவின் இளையமகன் அகில் ஹீரோவாக நடித்திருந்த அகில் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து ஹிந்தியிலும் அஜய் தேவ்கானுடம் ஜோடி போட்டு பாலிவுட்டிலும் அறிமுகத்தை கொடுத்தார்.

காதலித்து திருமணம்

காதலித்து திருமணம்

இவ்வாறு எடுத்த எடுப்பிலேயே பிரபலமான நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து மாஸ் காட்டிவந்த சாயிஷா தமிழில் வனமகன் திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து அடுத்தடுத்த வாய்ப்புகள் இவருக்கு தமிழில் வர தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் கவனம் செலுத்தியதை அடுத்து சென்ற ஆண்டு நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

காதுகளில் புகை

காதுகளில் புகை

இளம் பெண்களின் மனதை கொள்ளை கொண்டு சாக்லேட் பாயாக வலம் வந்த ஆர்யாவை யார் திருமணம் செய்யப் போகிறார் என பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,இதற்க்கு தனி நிகழ்ச்சி ஒன்று நடத்தி தனக்கான துணையை தேடிவந்த ஆர்யா போட்டியாளர்கள் அனைவருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு கடைசியில் நடிகை சாயிஷாவையே கரம் பிடித்தது பல பெண்களின் காதுகளில் புகையை வரவழைத்தது.

மீண்டும் ஜோடி சேர்ந்து

மீண்டும் ஜோடி சேர்ந்து

கோலிவுட்டில் க்யூட்டான கப்புலாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர்கள் சூர்யாவின் காப்பான் திரைப்படத்தில் இணைந்து நடித்திருக்க, மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கும் டெடி திரைப்படம் விரைவிலேயே வெளியாக உள்ளது.

Recommended Video

சாயிஷா.. என்ன பண்ணியிருக்கார் பாருங்க!
ரொமான்டிக்காக வாழ்த்து

ரொமான்டிக்காக வாழ்த்து

இந்த நிலையில் நேற்று ஆர்யா தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வர சாயிஷா, ஆர்யாவின் மடியில் உட்கார்ந்திருக்கின்றவாறு செம க்யூட்டான புகைப்படத்தை பதிவிட்டு " நீங்கள் எனக்கு கணவராக கிடைத்தது மிகப்பெரிய பெருமை எனக்கு, என்றும் உங்களை நேசிக்கும் நான்" என ரொமான்டிக்காக வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Read more about: sayyeshaa சாயீஷா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X