மோனிகாவின் ஆபாச படம்:ஒளிபரப்ப உச்சநீதிமன்றம் தடை

By Staff

டெல்லி:போபால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது ரகசியக் காமரா மூலம் ஆபாச கோலத்தில் எடுக்கப்பட்ட மோனிகா பேடியின் புகைப்படங்களை டிவிகளில் ஒளிபரப்ப கூடாது என உத்தரவு பிறப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போர்ச்சுகல் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வரப்பட்ட பின்னர் மோனிகா பேடி மீது போலி பாஸ்போர்ட் வழக்கு தொடரப்பட்டது. இதில் கைது செய்யப்பட்டு போபால் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு மற்றும் ஹைதராபாத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட போலி பாஸ்போர்ட் வழக்கு ஆகியவற்றில் ஜாமீன் பெற்ற மோனிகா பேடி தற்போது விடுதலையாகியுள்ளார்.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மோனிகா பேடி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ்.துள்சி இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், போபால் சிறையில் மோனிகா பேடி அடைக்கப்பட்டிருந்தபோது, அவர் குளியலறையில் குளித்த காட்சியை ரகசியக் காமரா வைத்து புகைப்படம் எடுத்துள்ளனர். இதை ஒரு தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.

இந்தப் புகைப்படத்தை எந்தத் தொலைக்காட்சியும் ஒளிபரப்பக் கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு இன்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆட்சேபனைக்குரிய புகைப்படங்களை எந்தத் தொலைக்காட்சியும் ஒளிபரப்பக் கூடாது என்று மத்திய அரசு உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும், தனது ஆபாசப் புகைப்படத்தை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சி மீது வழக்கு தொடர மோனிகா பேடிக்கு உரிமை உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X