நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை வழக்கு...தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
சென்னை : நடிகர் சங்க தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டு சிலர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.
நடிகர் சங்க தேர்தல் 2019 ம் தேதி ஆண்டு ஜுன் மாதம் நடைபெற்றது. இதில் விஷால் தலைமையிலான அணியும், பாக்யராஜ் தலைமையிலான அணியும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் சென்னை நுங்கம்பாக்கம் சவுத் இந்தியன் வங்கி கிளையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

நடிகர் சங்க தேர்தல் ஓட்டு எண்ணிக்கை
இதனால் வழக்கு முடியும் வரை நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியும் நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற வழக்கில் நடிகர் சங்க தேர்தல் செல்லும் என சமீபத்தில் ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்களை நான்கு வாரங்களில் எண்ண வேண்டும் என தேர்தல் அதிகாரிக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

ஓட்டு எண்ணிக்கைக்கு எதிராக முறையீடு
நடிகர் சங்க தேர்தலில் பதிவான ஓட்டுக்களின் எண்ணிக்கை மார்ச் 20 ம் தேதி காலை 8 மணிக்கு துவங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என சிலர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

மார்ச் 20 ல் ஓட்டு எண்ணிக்கை
இந்த வழக்கில், நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்ற ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. மேலும் ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி மார்ச் 20 ம் தேதி காலை நடிகர் சங்க தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. என்று மாலைக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

வெல்ல போவது யார்
பலத்த பாதுகாப்புடன் நடிகர் சங்க தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட உள்ளது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் மட்டுமே ஓட்டு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால் தேர்தலில் யார் வெற்றி பெற போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











