twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘காலா’க்கு உரிமை கோரிய மனு... தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

    காலா படம் தொடர்பாக ராஜசேகர் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    |

    Recommended Video

    ராஜசேகர் என்னோட கதை காலா என்று கொடுத்த மனு தள்ளுபடி ஆனது- வீடியோ

    சென்னை: காலா படத்திற்கு தடை விதிக்கக்கோரி ராஜசேகர் என்பவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    கபாலி படத்தை இயக்கிய பா. ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் ரஜினி நடித்துள்ள படம் காலா. இது ரஜினியின் 164-ஆவது படம். இப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீசாக இருக்கிறது.

    SC dismisses petition against Kaala

    முன்னதாக இப்படத்திற்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராஜசேகர் என்பவர் புகார் ஒன்றை அளித்தார். அதில், காலா திரைப்படத்தின் தலைப்பு, கதைக் கரு தன்னுடையது என அவர் தெரிவித்திருந்தார்.

    மேலும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் 1996 -ஆம் ஆண்டே காலா பெயரை தான் பதிவு செய்திருப்பதாக கூறிய ராஜசேகர், அப்படத்தின் கதையை ஏற்கெனவே இயக்குநர் ஒருவரிடம் தெரிவித்துள்ளதாகவும் தனது புகாரில் கூறியிருந்தார். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜூன் 15-ஆம் தேதிக்குள் இயக்குநர் பா. ரஞ்சித்தும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    இந்நிலையில் காலா படத்துக்கு தடை கோரி ராஜசேகர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், இந்த வழக்கை ஏற்க முகாந்திரம் இல்லை எனக்கூறி, நீதிபதி அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.

    English summary
    The Supreme court today dismissed the petition seeking stay on Rajini's Kaala movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X