twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெண் என்பதால் மேக்கப் கலைஞர்களை ஒதுக்கக் கூடாது: பாலிவுட்டுக்கு சுப்ரீம் கோர்ட் 'குட்டு'

    By Siva
    |

    டெல்லி: பெண் மேக்கப் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினர்கள் ஆகலாம். பெண்கள் என்பதற்காக அவர்களை ஒதுக்கி வைக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

    பாலிவுட்டில் பெண் மேக்கப் கலைஞர்களுக்கு என்று சில கட்டுப்பாடுகள் உள்ளது. அவர்கள் மேக்கப் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக முடியாது. மேலும் ஒரு சங்கத்தில் உறுப்பினராக குறிப்பிட்ட மேக்கப் கலைஞர் ஒரே இடத்தில் 5 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன.

    SC puts an end to restrictions on women makeup artists in Bollywood

    இந்நிலையில் இந்த 2 விதிமுறைகளையும் எதிர்த்து மேக்கப் கலைஞரான சாரு குரானா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், பெண் என்பதால் ஒருவருக்கு கட்டுப்பாடு விதிக்க முடியாது, அதனால் அவர்களுக்கு அந்த 2 கட்டுப்பாடுகளும் விதிக்க முடியாது என்று இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

    இந்த தீர்ப்பால் பெண் மேக்கப் கலைஞர்கள் இனி பாலிவுட்டில் நிம்மதியாக வேலை பார்க்க முடியும். பாலிவுட்டில் ஹீரோக்களுக்கு நிகராக ஹீரோயின்கள் வளர்ந்து வரும் காலத்தில் மேக்கப் கலைஞர்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதித்திருந்திருக்கிறார்கள்.

    ஆணுக்கு பெண் சரிசமம் என்பதை உச்ச நீதிமன்றம் புரிய வைத்துள்ளது.

    English summary
    Supreme Court on Monday ended gender bias in Bollywood by quashing restrictions on women makeup artists in the industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X